Tag: udhayanidhi stalin
“ஆர்டிக்கல் 15′ இந்திப்படத்தின் தமிழாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்றவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர். சமீபமாக அவர் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து அதில் இங்கு இருக்கும் நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை பணி புரிய வைத்து ஊக்குவித்து வருகிறார். கடந்த வருடம் அமிதாப் பச்சன் நடித்த "பிங்க்" திரைப்படத்தை தமிழில் அஜித் குமார் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" படத்தை தயாரித்து , பெரும் வெற்றியை பெற்று அதன் மூலம் தம...
“தர்பார்” படத்துடன் வெளியிடப்படும் “சைக்கோ” டிரெய்லர்!
உணர்வை நம்முள் கடத்தும், ஆத்மாவை உள்ளிழுத்து கொள்ளும் பாடல்களில் மெலடிக்கு எப்போதும் முதல் இடம் இருக்கும். இப்போது இணையம் முழுதும், யூடுயூப் முதற்கொண்டு சைக்கோ படத்தின் “நீங்க முடியுமா” பாடல் தான் எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஏற்கனவே வெளியான “உன்ன நினைச்சு” பாடல் ரசிகர்களின் விருப்பங்களை அள்ளிய நிலையில், இப்போது சித் ஶ்ரீராம் குரலில் வெளியாகியிருக்கும் உயிரை உருக்கும் இந்த மெலோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது....
பாடலுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, என்னை மெய்மறக்க செய்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவரது இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் எக்காலாத்திலும் அவரே இசையின் ராஜா. “சைக்கோ” படத்தின் பாடல்கள் என்னை உருக்கி வி...
டிசம்பர் 27 முதல் “சைக்கோ”!
ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது...
நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்கு...
‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு!
மிரட்டலான 'சைக்கோ' டீஸர், தவிர்க்கவே முடியாத வகையில் அதி பயங்கர ஜூரம்போல் இடையறாமல் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. தனக்கேயுரிய பாணியில் காட்சிகளை அமைத்து தரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது 'சைக்கோ' டீசருடன் களம் காணத் தயாராகி விட்டார். நேற்று மாலை வெளியான சைக்கோ டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில், இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான். டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின...






