கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமனம்!
வரவிருக்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) சீசனில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்!*
நடிகரும் கிரிக்கெட் ஆர்வலருமான உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அணியின் இணை உரிமையாளர் ராஜ்குமார் சேதுபதி வெளியிட்டார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்கிறார் ராஜ்குமார் சேதுபதி. மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மட்டுமல்லாது, உன்னி முகுந்தனின் அனுபவமும் கிரிக்கெட் பற்றிய புரிதலும் நிச்சயம் அணியினருக்கு புது உற்சாகம் கொடுக்கும் என்கிறார்.
உன்னி முகுந்தனின் பிறந்தநாளான செப்டம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திறமையான கேப்டன், அனுபவம் பெற்ற மற்றும் புதிய...
