உசுரே _ விமர்சனம்
உசுரே _ விமர்சனம்
ஆந்திரா, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூரில் நடப்பதாக சித்தரிக்கப்படும் 'உசுரே' படத்தின் கதை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாயகன் டீஜய் அருணாசலம் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு தன் தாய் மந்த்ராவுடன் குடி வருகிறார் நாயகி ஜனனி.
தன் மகளை யாராவது சாதாரணமாகப் பார்த்தாலே கன்னத்தில் 'பளார்' விடும் கண்டிப்பான தாயான மந்த்ராவை மீறி ஜனனியை காதலிக்கிறார் டீஜய்.
ஆரம்பத்தில் இந்தக் காதலை ஜனனி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், டீஜய் தன்மீது கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான காதலைப் புரிந்து கொண்டு ஜனனியும் காதலிக்க தொடங்குகிறார்.
மகளின் காதல் மந்த்ராவுக்கு தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஆச்சரியங்களை மட்டுமல்ல பல அதிர்ச்சிகளையும் கொடுக்கிறது.
70 களிலும் 80 களிலும் வந்த திரைப்படங்களின் கதையைப் போல் சாதாரணமாக சென்று கொண்டிருந்த 'உ...
