வாழை _ விமர்சனம்
வாழை _ விமர்சனம்
Vaazhai Movie Review
தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவங்களை அழகான திரைமொழியில் அற்புதமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். இங்கு, விவசாய கூலி வேலை குடும்பம். குடும்பத் தலைவர் மறைந்துவிட்ட நிலையில், தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் வாழ்கிறான் சிறுவன் சிவனைந்தன்.
அம்மாவும், அக்காவும் லாரியில் சென்று, வாழைத் தோட்டங்களில், அறுக்கப்பட்ட வாழைத் தார்களை தலையில் சுமந்து வந்து சேர்க்கும் கூலி வேலை செய்கின்றனர்.
சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினங்களில் சிவனைந்தனும் செல்கிறான். அவனுக்கு அந்த வேலை பிடிப்பதில்லை. அத்தனை கடினம். தவிர சிறுவன் என்பதால் விளையாடும் ஆர்வம் இருக்கும் அல்லவா...
ஒரு சனிக்கிழமை அன்று தாய்க்கு தெரியாமல், வாழைத்தோட்ட வேலைக்கு டிமிக்கி கொடுக்கிறான் சிறுவன் சிவனைந்தன். ஆனால் அக்காவிடம் மட்டும் சொல்லி அனுமத...
