வதந்தி வெப் சீரிஸ் – விமர்சனம்
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.
பெரும் வரவேற்பைப் பெற்ற சுழல் வெப் சீரிஸைத் தயாரித்த புஷ்கர் காயத்ரி இரட்டையர்கள் தயாரிப்பில் இது உருவாகியிருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக பிரதான வேடத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் இது.
ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான வெரோனி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவளைக் கொன்றது யார் கொலைக்கான காரணம் என்ன என்பது எட்டு எபிஸோட்களாக விரிகிறது.
வெலோனி தன்னைக் காதலிப்பதாக பொய் சொல்லி பந்தா காட்டித் திரியும் ஓர் இளைஞன், வெலோனியின் விருப்பத்துக்கு மாறாக அவளது அம்மாவின் ஆதரவுடன் அவளைத் திருமணம் செய்யக் காத்திருக்கும் ஓரு குடிகார இளைஞன், சமூக விரோத செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடும் அண்ணன் தம்பிகள் என்று பலரும் காவல்துறை அதிகாரி சூர்யாவின் விசாரணை வளை...
