வலிமை திரைப்பட விமர்சனம்
வலிமை திரைப்பட விமர்சனம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் வலிமை அஜித் ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தைப் படைத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
அஜித் பைக் ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பைக்கில் அவர் இந்த அளவுக்கு சாகசங்கள் புரிவது வலிமை படத்தில்தான்.
வலிமை படத்தின் கதையைப் பார்ப்போமா....உதவி கமிஷனர் பொறுப்பில் இருக்கும் அஜித் குமார் ஒரு நேர்மையான அதே சமயம் வி்த்தியாசமான அதிகாரி. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதைவிட அந்தக் குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர். மதுரையில் பணி செய்த அவர் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார்.
சென்னையில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு, தன் கடமையை அவர் எப்படி போராடி நிறைவேற்றுகிறார் என்பதே வலிமை....
செயின் அறுக்கும் திருடர்களையும், போதை மருந்துக்கு அடிமையன இளைஞர்களையும் எப்படி அஜித் எதிர்கெ...
