மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும் ‘வாரணாசி’ (
மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும் ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !
இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது. Sri Durga Arts மற்றும் Showing Business நிறுவனங்களின் சார்பில் K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த மாபெரும் ஆக்ஷன்–த்ரில்லர் திரைப்படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தொடர்பான ஒவ்வொரு தகவலும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.
...
