வேதா _ விமர்சனம்
வேதா _ விமர்சனம்
என்னதான் அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னமும் சாதீய ஏற்றத்தாழ்வு கொடுமைகள் நிகழ்ந்தபடிதான் உள்ளன என்பதை சொல்லும் படம் வேதா.
வட இந்தியாவின் பின்தங்கிய கிராமம். இந்த காலத்திலும் சாதிய அடிமை முறை நிலவுகிறது. சுற்றுப்பட்டு கிராமங்களை அடக்கிவைத்திருக்கும் ஜமீன் குடும்பத்தின் எதேச்சகாரம் தூள் பரத்துகிறது.
இங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், குத்து சண்டை கற்க விரும்புகிறாள். அவளது அண்ணனும், ஓர் உயர் சாதி பெண்ணும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன ஆனது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம்தான் வேதா.
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக, தனது வர்க்க வலியை கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஷர்வாரி. சாதி இழிவுக்கு ஆளாவது, அதிலிருந்து மீள போராடுவது, அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ...
