Sunday, September 20

Tag: vijay devaragonda

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’!

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’!

News
சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் 'ரவுடி ஜனார்த்தனா' படத்தில் இருந்து வெளியாகியுள்ளது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்க...
விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

News
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது. சபிக்கப்பட்ட நிலத்தையும் அதன் கதாநாயகனையும் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை தீவிரமான காட்சிகளுடனும் வலுவான கதை சொல்லலுடனும் படத்தின் கிளிம்ப்ஸில் காண முடிகிறது. குறிப்பாக, சர் ரிச்சர...
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது !

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது !

News
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது ! *தில் ராஜு - சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!* ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப...
விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்!

விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்!

News
விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்! விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது. விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது: “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக...
“தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா!

“தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா!

News
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தி கேர்ள்பிரண்ட்". பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள "தி கேர்ள்பிரண்ட்" படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். இன்று, பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீசரை வெளியிட்டார். படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது.. ""தி கேர்ள்பிரண்ட்" டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் ...
விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் ‘VD12’

விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் ‘VD12’

News
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் 'VD12' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது! டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக 'ஜெர்சி' புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'VD12' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், விஜய் தீவிரமாக துப்பாக்கியை பிடித்துள்ள அதே சமயம் அழகாகவும் இருக்கிறார். இந்த முதல் கிளிம்ப்ஸ் போஸ்டரில் அவரது தோற்றம் அவுட் ஆஃப் போகஸில் உள்ளதால் படத்திற்காக...