Friday, October 23

Tag: Vijay Deverakonda\

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘கிங்டம்’ ட்ரைலர்!

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘கிங்டம்’ ட்ரைலர்!

News
'கிங்டம்' ட்ரைலர் வெளியீடு - எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது ! விஜய் தேவராகொண்டா நடித்துள்ள "கிங்டம்" படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்‌ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜயின் 'சூரி' மற்றும் சத்யதேவின் 'சிவா' இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு...
‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

News
பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு க...
நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

News
தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குஷி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருக...
எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்!

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்!

News
எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார் 'கீத கோவிந்தம்' படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிளாக் பஸ்டர் வெற்றியான 'கீத கோவிந்தம்' படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும். ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது. நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில ந...
விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜேஜிஎம்’ படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜேஜிஎம்’ படப்பிடிப்பு தொடக்கம்!

News
பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஜேஜிஎம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். தெலுங்கு திரை உலகின் பாதையை திசை திருப்பிய படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'ஜேஜிஎம்'. பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் 'ஜேஜிஎம்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான 'ஜேஜிஎம்' திரைப்படத்தை அவருடைய சொந்த பட நிற...
விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர். இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதைய...
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பம்!

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பம்!

News
பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு ஸ்டைலீஷாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E - அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது, நாளை ஒரு உற்சாகமான அறிவிப்பு வெளிவரவுள்ளது. மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படைப்பின் மே...
“LIGER”  படப்பிடிப்பில் மைக் டைசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா!

“LIGER” படப்பிடிப்பில் மைக் டைசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா!

News
உலகின் பல முனைகளிலும் உள்ள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும், வரலாற்று நாயகன் மைக் டைசன், இந்திய திரையுலகில், பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) படத்தில் அறிமுகமாகிறார். இன்றைய தலைமுறையின் கனவு நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இப்படத்தை இயக்குகிறார். வீழ்த்தமுடியாத வீரனாக, குத்துச்ண்டையில் அதிரடி பஞ்ச்களால் மக்களின் அபிமானத்தை குவித்த, வரலாற்றின் புகழ் மிகு நாயகன் மைக் டைசன் மிக முக்கியமான, நேர்த்தியான பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பொன்நாள் வந்தே விட்டது. தற்போது “LIGER” படக்குழு அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இருவரும் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளது. இன்று துவங்கியுள்ள இந்தப்படப்பிடிப்பில், மிக முக்கிய காட்சிகள் பிர...