Wednesday, November 18

Tag: vijay sethupathi

‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

News
பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ படப்பிடிப்பு துவங்கியது பேஷன் ஸ்டுடியோஸ் இந்த வருடம் 2023-ல் பல படங்களுக்கான திட்டங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தற்போது அதன் புதிய புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் ’மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சில முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்தி...

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் ‘மைக்கேல்’!

News
Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்' ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது.., "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்." தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது., " சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இரு...
சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு! நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மக்கள் செல்வன் வ...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு  விருந்து படைத்த பிரைம் வீடியோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ!

News
பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியிட்டுள்ளது. ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும் ஷாகித் கபூர் பாத்திரத்தை துரத்தி பிடிக்கும் மைக்கேல் எனும் காவலதிகாரி பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த நாட்டிலிருந்து கள்ளநோட்டுக் கும்பலை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு காவல் அதிகாரியின் அதிரடியான வாழ்க்கையை அசத்தலாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ காட்சிகள். கள்ள நோட்டு கும்பலில் பின்னால் இருக்கும் மனுசுக் (கே கே மேனன்) மற்றும் ஆர்டிஸ்ட் ( ஷாகித் கபூர் ) இருவரையும் பிடிக்க விஜய் சேதுபதியின் காவலதிகாரி ப...
விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமான ‘ஃபார்ஸி’ பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமான ‘ஃபார்ஸி’ பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

News
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது! ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது . மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்” சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார். ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என...
“கமல்ஹாசன் செய்த சாதனைகள் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும்” – விஜய் சேதுபதி!

“கமல்ஹாசன் செய்த சாதனைகள் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும்” – விஜய் சேதுபதி!

News
டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகை அனு கீர்த்தி கூறியதாவது... டிஎஸ்பி தான் எனது முதல் படம், இந்த படத்தில் எனக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. விஜய் சேதுபதி சார் போன்ற ஒரு நடிகருடன் திரையை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு நிறைய கற்று கொடுத்தார். இமான் சார் இசையில் நான் நடித்திருப்பது பெரிய சந்தோஷம். படத்தின் தொழில்நுட்ப குழுவின் கடின உழைப்பினால் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ட...