விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ ஜிம்!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்!
இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் மெட்ராஸ் பிட்னஸ் எனும் பெயரிலான உடற்பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார்.
'பிக் பாஸ்' புகழ் மணிகண்டன் ராஜேஷ் - ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த 'மெட்ராஸ் பிட்னஸ்' எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழங்கும் இந்த உடற்பயிற்சி கூட திறப்பு வ...