Saturday, September 26

Tag: vijay sethupathy

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’ !

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’ !

News
ஒரு படம் குறித்த அறிவிப்பு உலகளவில்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது மிகவும் அரிதானது.  உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ்  மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ்  நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் ...

விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

News
விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து', இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி', தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த "படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்" படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் 'குலசாமி' என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் ராஜதுரை இயக்கத்தில் 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல். 'குலசாமி' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'குலசாமி' படத்தின் படப...
விஜய் சேதுபதிக்காக ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கும் சுயாதீனப் பாடல்!

விஜய் சேதுபதிக்காக ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கும் சுயாதீனப் பாடல்!

News
கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்த திரைக்கலைஞர்களுக்கு சுயாதீனப் பாடல்களை உருவாக்கி சமர்ப்பணம் செய்துவருகிறார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற  பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யும் எண்ணத்துடன் "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற சுயாதீனப் பாடலை தற்போது உருவாக்கியுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர். கலையை உயிருக்குச் சமமாக நேசிக்கும் மனிதர்களை வயது, சாதி, மதம், பாலினம் போன்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் திறமையின் அடிப்படையில் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, பல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களின் உறுதுணையுடன் ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கியுள்ள இந்தப் பாடலுக்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஒரு கலைஞனை இவ்வளவு நேசித்து அவருக்...
விவசாயிகளின் பிரச்னையை விரிவாகப் பேசும் ‘லாபம்’!

விவசாயிகளின் பிரச்னையை விரிவாகப் பேசும் ‘லாபம்’!

Uncategorized
"உழைத்தால் உயரலாம் சரி! யார் உழைத்தால் யார் உயரலாம்?" பொருளாதார நிலைப் பற்றி இப்படியொரு கவிதை உண்டு. இந்த வரிகளில் உள்ள அரசியலைப் பற்றிப் கலை வடிவில் பேச வேண்டுமானால் அதற்கு தேர்ந்த ஒரு கலைக்கூட்டணி வேண்டும். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் லாபம் படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.  படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக அம...
திருநங்கைகளின் உலக சாதனைக்கு துணை நின்ற விஜய் சேதுபதி!

திருநங்கைகளின் உலக சாதனைக்கு துணை நின்ற விஜய் சேதுபதி!

News
73 ஆம்  இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்தவர் திரையுலக கலைஞன் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள். இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது. இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம். திருநங்கைகளை...
’சென்னை பழனி மார்ஸ்’ -வித்தியாசமான பயணம்!

’சென்னை பழனி மார்ஸ்’ -வித்தியாசமான பயணம்!

News
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ.    இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை படக்குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ.   நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும்.    எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.     நண்பர்கள் இருவர் சேர்ந்து  சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித...