ஈழப்பெண்ணுக்கு நடிப்பு சொல்லித் தந்த விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி, விவேக், மேகா ஆகாஷ், மதுரா நடிப்பில் வேங்கட கிருஷ்ணா ரோஃநாத் இயக்கத்தில் மே 19ம் தேதி திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”.
இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் “ஜெசி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை தான் மதுரா.
தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு,
என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதால் என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் ...







