விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்கும் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படம்!*
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்தார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார். இவரது தயாரிப்பில், இந்த வருடம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ உட்பட சில படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. தற்போது, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை அறிவிப்பதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் மகிழ்ச்சியடைகிறார். இந்தப் படத்தில் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமாரும் அறிமுகமாகிறார்.
திறமை மற்றும் கடின உழைப்பு இருப்பவர்களை நிச்சயம் கோலிவுட் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கும்....









