Monday, September 28

மணிரத்னம் கதை வசனம் எழுதும் வானம் கொட்டட்டும்!

Loading

Mani Ratnam

Vikram Prabhu

 

மணிரத்னம் கதை வசனத்தில் வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா படைவீரன் படம் மூலம் இயக்குநரானார்.
இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் “வானம் கொட்டடும்” படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கயையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் ராதிகா அப்பா அம்மாவாக நடிக்கிறார்கள்.

இப்படம் உருவானதன் என் ஊர் தேனியில் நான் சந்தித்த சில மனிதர்களை பற்றி மணி சாரிடம் சொல்லியிருந்தேன். அவர் அதை ஒரு கதையாக என்னிடமே கதையாக சொல்ல, அசன்ந்துவிட்டேஅன் நான், என்று சொன்ன டைரக்டர் மேலும் தொடர்ந்து .. “படைவீரன்” படத்துக்கு பிறகு என்னை அழைத்து, அங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும் நீ இந்தப்படத்தை செய் நான் தயாரிக்கிறேன் என்றார்.நடிகர்களை அவரே கூறினார். அப்படித்தான் இப்படம் துவங்கியது என்கிறார் இயக்குநர் தனா.

பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் முதல்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேனியில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.