Friday, October 23

Tag: Viruman

ஆகஸ்ட் 12ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் ‘விருமன்’

News
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் "விருமன்". முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசியதாவது... முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கார்த்தி சாரின் ஸ்மைல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த படத்தில், ஷங்கர் சார் உதவி இயக்குனராக இருந்தார். அவருடைய பெண் கதாநாயகியாக நடிப்பதில் வாழ்த்துகள் என்றார். இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசியதாவது... மதுரையிலேயே ...
சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி!

Uncategorized
நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இதையடுத்து 2D Entertainment நிறுவனம் பெருமை மிகு படைப்பாக “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட பிரமாண்ட புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் அதிக வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார். நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட ...