Wednesday, September 30

Tag: Virupaksha review

விரூபாக்ஷா – திரைப்பட விமர்சனம்

விரூபாக்ஷா – திரைப்பட விமர்சனம்

Reviews
விரூபாக்ஷா - திரைப்பட விமர்சனம் ஆன்மீகத்தையும் அமானுஷ்யத்தையும் அழகாக கலந்து நெய்யப்பட்ட அருமையான கதையம்சம் கொண்ட படம்தான் விருபாக்ஷா. தன் சொந்த கிராமமான ருத்ராவனத்துக்கு தாயாருடன் வருகிறார் நாயகன் சூர்யா. அங்கே கிராமத்து பெரியதனக்காரர் ஹரி சந்திராவின் மகளான நந்தினியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கத் துவங்குகிறார். நந்தினியும் சூர்யாவைக் காதலித்தாலும் தன் காதலை வெளிப்படையாக சொல்ல ஏனோ தயங்குகிறாள். இந்த சூழலில் கிராமத்தில் வசிக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அதாவது ஒருவர் மரணிப்பதை முதன் முதலாக பார்க்கும் நபர் அடுத்ததாக மர்மமான முறையில் இறக்கிறார். இது தொடர்கதையாக சில மரணங்கள்வரை நீளவே, நாயகன் சூர்யா இந்த மர்மத்தை கண்டு பிடிக்க களம் இறங்குகிறார். அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா.. மர்ம மரணங்களுக்கு காரணம் என்ன என்பதை சுவைபட விளக்குகிறது விரூபா...