வில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் அஜெய்ரத்தினம் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் ...அஜெய் ரத்னம் துவங்கி உள்ள V square என்கிற விளையாட்டு கூடத்தினை நடிகர் விஷால் திறந்து வைத்தார்..இந்த விழாவில் நடிகர் நாசரும் கலந்து கொண்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார்.
அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யரைத் திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது.
எந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டாலும் தன்னுடைய திருமணம் பற்றிய செய்தியை எப்போது அறிவிப்பார் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்ற வாரம் கூட விஷால் திருமணம் பற்றிய செய்தி வைரலாக பரவியது. அதற்கு விஷால், என் திருமணம் பற்றியும், நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியும் விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
அதற்கு ...
2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 'இளையராஜா75' டீசர் பல உருவாக்கப்பட்டது . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் விஷால், ,கார்த்தி,விஜய்சேதுபதி, ஜெயம் ரவி,ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, ,அதர்வா, சந்தானம் மற்ற...