டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”!
மதுரை அடங்காத காளையாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”!
விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”.
மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.
இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி,
பின் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது.
தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஊர் பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் ச...
