Sunday, November 15

Tag: YAARO-Film review

யாரோ – விமர்சனம்

யாரோ – விமர்சனம்

Reviews
யாரோ - விமர்சனம் கடற்கரையை ஒட்டியுள்ள அழகான பங்களாவில் தனி ஆளாக வசித்து வருகிறான் ஜான். கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவரது வீட்டுக்கு திடீரென வரும் ஒருவன் தாகமாக இருப்பதாகச் சொல்லி தண்ணீர் கேட்கிறான். தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க முற்படும்போது அவனைக் காணவில்லை. இதிலிருந்து ஜானுக்கு சில பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன வீட்டில் தன்னைத் தவிர வேறு யாரோ இருப்பதாக ஜான் உணர்கிறான். ஜானுக்கு அலுவலகத்திலும் சில பிரச்னை. அவன் வடிவமைத்த கட்டிட வரைபடம் நிராகரிக்கப்படுகிறது. உதவிக்கு வரும் ஜானுடைய நண்பன் அலுவலகப் பிரச்னையில் ஏற்படும் மன அழுத்தமே கண்ட கற்பனைகளை உருவாக்குகிறது என்றும், வீட்டில் வேறு யாரும் இல்லை என்று கூறிச் செல்கிறான். அடுத்து தன் வீட்டில் வேறு யாரோ நுழைந்து விட்டதாக நண்பனிடம் சொல்ல, அவன் தன் உறவினரான போலீஸ் அதிகாரியுடன் வருகிறான். அவரும் வீட்டை ஆய்வு செய்து பார்த்துவிட்டு ...