Tuesday, September 1

Tag: Yashika Anand

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்!

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்!

News
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார். எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் ...
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா”!

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா”!

News
24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " நவம்பர் 17 முதல் திரையரங்குகளில் மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு " சைத்ரா " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். . இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி. இணை தயாரிப்பு - T. கண்ணன் வரதராஜ். தயாரிப்பு - K. மனோகரன் கதை, ...

ஆரவ் நடிக்கும் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த்!

News
ஆரவ், ஆஷிமா நர்வால்  நடிப்பில் உருவாகியிருக்கும் “ராஜபீமா” திரைப்படம் 2020 ஆம் வருடத்தின் எதிர்ப்பார்க்குரிய  படங்களில் ஒன்றாக ஆகியிருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் கலந்து கட்டி கச்சிதமாக இருந்ததே, இப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியதற்கு காரணம். இப்போது மேலும் ஒர் ஆச்சர்யமாக யாஷிகா ஆனந்தின் சிறப்புத்தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக்கியிருக்கிறது. இயக்குநர் நரேஷ் சம்பத் இது குறித்து கூறியதாவது.... ஆம்,  இப்படத்தில் யாஷிகா ஆனந்த் இருக்கிறார். அவர் ஒரு ஜர்னலிஸ்டாக வருகிறார். அவரது பாத்திரம் நிறைய திருப்பங்கள் கொண்டதாக, முக்கியமாக க்ளைமாக்ஸ்க்கு முன்னதான காட்சிகளில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்துவதாக, ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தருவதாக இருக்கும். இத்திரைக்கதையை எழ...
பிரேம்ஜி இசைக் காட்டேரியா?

பிரேம்ஜி இசைக் காட்டேரியா?

News
S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது, 'ஜாம்பி' மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில் இருக்கும் தொழில்நுட்ப வசதி இங்கு கிடையாது. ஆனால், அதே தரத்தில் இந்த படத்தை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாற்றத்திற்காக குத்துப் பாடல் வைத்திருக்கிறோம். பார்ட்டி பாடல் நன்றாக வந்துள்ளது என்றார். இயக்குநர் சிவா பேசும்போது, ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இடையிடையே சிறு சிறு நகைச்சுவை இருக்கும். அதேபோல், இப்படத்திலும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக அமைந்திருந்த நகைச்சுவையைக் கண்டு களித்தேன். யோகிபாபுவின் நகைச்சுவை நன்றாக அமைந்திருக்கிறது என்றார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு கே.ஸ். பேசும்போது, முத்துக்குமார் நான் பணியாற்றிய முந்தையப...
அமெரிக்காவை கலக்கப் புறப்படும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி!

அமெரிக்காவை கலக்கப் புறப்படும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி!

News
அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்வி ஷா, ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர...
யோகிபாபு , யாஷிகா ஆனந்த் நடிக்கும்  ஜாம்பி…

யோகிபாபு , யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஜாம்பி…

News
எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்.        தற்போது யோகிபாபு , யாஷிகா ஆனந்த் ,  கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.      சமீபத்தில் வி.ஜி.ப...