இயக்குநர் நரேஷ் சம்பத் இது குறித்து கூறியதாவது….
ஆம், இப்படத்தில் யாஷிகா ஆனந்த் இருக்கிறார். அவர் ஒரு ஜர்னலிஸ்டாக வருகிறார். அவரது பாத்திரம் நிறைய திருப்பங்கள் கொண்டதாக, முக்கியமாக க்ளைமாக்ஸ்க்கு முன்னதான காட்சிகளில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்துவதாக, ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தருவதாக இருக்கும். இத்திரைக்கதையை எழுதும்போது ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகவும் வலிமையானதாக, கச்சிதமானதாக உருவாக்கப்பட்டது. அதிலும் இந்த கதாப்பாத்திரத்தை எழுதியபோது இக்கதாப்பாத்திரத்தை செய்ய குறிப்பிடதகுந்த ரசிகர் பட்டாளம் கொண்ட, கதாப்பாத்திரத்தை எளிதில் கையாளும் ஆளுமை தேவை என நினைத்தோம். பல்வேறு நடிகர்களை முயற்சித்த பிறகு யாஷிகா ஆனந்த் இப்பாத்திரத்தில் சரியான பொருத்தமாக இருப்பதாக அவரை தேர்வு செய்தோம். அவரும் மிக எளிதாக, அட்டகாசமான நடிப்பை தந்து இக்கதாப்பத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்.
யானைக்கும் ஹீரோவுக்கும் உள்ள உறவை, அன்பை சொல்லும் படமாக சொல்லப்பட்டாலும் “ராஜாபீமா” படத்தின் டிரெய்லர் யானை தந்த கடத்தலை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இது குறித்து கூறிய இயக்குநர் …
டிரெய்லர் மட்டுமல்ல இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும் இப்போதைக்கு இதை மட்டுமே கூற முடியும். இப்படம் அனைத்துவிதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
சைமன் K கிங் இசையில் இதுவரை வெளியாகியுள்ள இரண்டு சிங்கிள் பாடல்களும் ஹிட்டாகியுள்ள நிலையில் படத்தின் மற்ற பாடல்களின் இசை விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தை பெரிய எண்ணிக்கையிலான திரையரங்கில் பிரமாண்டமாக வெளியிட சரியான வெளியீட்டு தேதியை படக்குழு திட்டமிட்டு வருகிறது.
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S மோகன் “ராஜபீமா” திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, K S ரவிக்குமார், யோகிபாபு ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் ஓவியாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.