Tuesday, November 10

Tag: Yogi Babu

இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு

இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு

News
யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.   இப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.   இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய...
இறுதிகட்ட படப்பிடிப்பில்  “கூர்கா”

இறுதிகட்ட படப்பிடிப்பில் “கூர்கா”

News
தீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக  யோகிபாபுவின் "கூர்கா" திரைப்படத்தை நிலையான வேகத்தில் , சரியான திட்டமிடலோடு  படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.   " இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. "கூர்கா" கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர்.  நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா ,மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா , கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்" என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன்.     காமெடி மற்றும் ac...
இரட்டை வேடங்களில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’

இரட்டை வேடங்களில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’

News
ஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு கிரேஸ் மற்றும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இயற்கையாகவே, நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காக அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரா குழுவும் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள்.   இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, "இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், ...