Friday, November 14

Tag: Yogi Babu

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் 'போட்' திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவ...
யோகி பாபு நடிக்கும் வெப் சீரிஸ் “சட்னி சாம்பார்”

யோகி பாபு நடிக்கும் வெப் சீரிஸ் “சட்னி சாம்பார்”

News
யோகி பாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” சீரிஸிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தனித்துவமான விளம்பரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் 'சட்னி - சாம்பார்' சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இதயம் கவரும் ...
செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்!

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்!

News
செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்! தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்ட படத்தை ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார்!! சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்ற...

யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

News
மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார். அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் 'PRE' (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது. யோகிபாபு'வுடன் - இனியா கதாநாயகியாக நடிக்கிறார்.மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், ...

ஜூலை 8 முதல் படம் திரையரங்கில் வரும் “கிச்சி கிச்சி”!

News
"கடலை போட ஒரு பொண்ணு வேணும்னு" உண்மை யான தலைப்பு முதலில் வைத்திருந்தோம்.. அதுவே ரொம்ப பிரபலம் ஆயிருச்சி அது படத்தின் மீது வேற ஒரு பார்வையும் மக்கள் மத்தியில் பரவியது இப்போ "கிச்சி கிச்சி" மாத்தி அதை ரிலீஸ் பண்றோம் யோகி பாபு மன்சூரலிகான் செந்தில் மனோபாலா மனோகர் லொள்ளு சபா சாமிநாதன் மிகப்பெரும் பட்டாளமே நடித்துள்ளது இயக்குனர் சுந்தர்சியின் பட பாணியில் இது முழுக்க முழுக்க காமெடி படம் இதில் ஒரு தூய்மையான காதலை மையப்படுத்தி உள்ளோம் ஜூலை 8 முதல் படம் திரையரங்கில் வருகிறது சமுத்திரக்கனி மற்றும் கம்பீரம் அரசு படங்களில் இயக்குனர் சுரேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் பா. ஆனந்தராஜன் இவரின் முதல் படமான ரீங்காரமும் இசையை குறித்து உருவாகியிருக்கும் படம் அதுவும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது "கிச்சி கிச்சி ஜூலை 8 திரைக்கு வருகிறது சிறியது பெரியது என்று இல்ல...
“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

News
“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா ! தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குனர் ஹரி பேசியதாவது.... நானும், அருண்விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடி...