Saturday, October 24

Tag: yogibabu

யோகிபாபு நடிக்கும் “யானை முகத்தான்”

யோகிபாபு நடிக்கும் “யானை முகத்தான்”

News
    யோகிபாபு நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் "யானை முகத்தான்". பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்குகிறார். மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. 'யானை முகத்தான்' படத்தில், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்...

விஜய்சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் ‘கடைசி விவசாயி’!

News
நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். 'கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன்,...
கதிர், யோகிபாபு கூட்டணியில் “ஜடா “!

கதிர், யோகிபாபு கூட்டணியில் “ஜடா “!

News
"தி போயட் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் "ஜடா". "பரியேறும் பெருமாள்", " பிகில்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தும் கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா, எடிட்டிங் ரிச்சர்ட் கெவின். இப்படம் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து வெற்றிபெற்ற "பிகில்" படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது என்கிறார் இயக்குநர் குமரன். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்ப...
யோகிபாபு நடித்த “பட்லர் பாலு”!

யோகிபாபு நடித்த “பட்லர் பாலு”!

News
காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது  "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார்.  மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த “ பட்லர்பாலு “ படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற சமையல் வேலைக்காக சென்ற  திருமண மண்டபத்தில்  மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி  விடுகிறார்க...
அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…

அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…

News
அஞ்சலி, யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் இன்று படப்படிப்பு தொடங்கிய இப்படம், ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ் தெரிவித்ததாவது.... விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இதுவரை அஞ்ச...