Tuesday, October 20

Tag: yogibabu

யோகி பாபு நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ‘சந்நிதானம் (P.O)!

யோகி பாபு நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ‘சந்நிதானம் (P.O)!

News
யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம்(P.O)' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்! பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம்(P.O)' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. 'Tootu Madike' போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் 'Veerappan', 'Sooryavamsi', 'Vaanku' (தயாரிப்பு), 'Nalla Samayam' (விநியோகம்), 'Rudhiram' (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க யோகிபாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க யோகிபாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ்!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது... வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. பெரிய நட்சத...
நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் “குய்கோ” திரைப்படம்!

நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் “குய்கோ” திரைப்படம்!

News
நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் "குய்கோ" திரைப்படம் எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்...
யோகிபாபு நடிக்க கிராமத்து பின்னணியில் காமெடி டிராமாவாக உருவாகும் படம்

யோகிபாபு நடிக்க கிராமத்து பின்னணியில் காமெடி டிராமாவாக உருவாகும் படம்

News
“காவல்துறை உங்கள் நண்பன்” தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் இணையும் இரண்டாவது திரைப்டம் !! BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !! BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ்...
“கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன்”- யோகிபாபு

“கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன்”- யோகிபாபு

News
‘லக்கிமேன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது. நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களில் யோகிபாபுவும் ஒருவர். ‘லக்கிமேன்’ போன்ற கதைக்களம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. யோகிபாபு சார் நடிப்பை படத்தில் ரசித்...
“ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது”- பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

“ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது”- பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

News
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். வரும் பிப்ரவரி-3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று க...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் பொம்மை நாயகி பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது!

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் பொம்மை நாயகி பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது!

News
எதிர்பார்ப்புகளை எகிற வைத்து கவனத்தை ஈர்க்கும் படமாக உருவாகியிருக்கும்'பொம்மை நாயகி' இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி. யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்க...
யோகி பாபு மனம் கவர்ந்த மலையாளப்பட டைரக்டர்  ரெஜிஷ் மிதிலா

யோகி பாபு மனம் கவர்ந்த மலையாளப்பட டைரக்டர் ரெஜிஷ் மிதிலா

News
"யானை முகத்தான்" படத்தை பார்த்து விட்டு உடனே அடுத்த படம் ஆரம்பிக்கலாம் என்கிறார் யோகி பாபு.. டைரக்டர்  ரெஜிஷ் மிதிலா பெருமிதம்! “மலையாளத்தில் 'லால் பகதூர் ஷாஸ்த்தி', 'வரி குழியிலே கொலபாதகம்', 'இன்னு முதல்' என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்த ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழுக்கு வருகிறார். படத்தை பற்றி டைரக்டர் சொல்கையில்.. "எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையெய் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார். அதுதான் 'யானை முகத்தான்'. பேண்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால் கொஞ்சம் பிராடு....