![]()
செப்டம்பர் 5 இந்த ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் கேளிக்கையின் உச்சகட்டத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள்!
சென்னை 3 செப்டம்பர் 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழின், குதூகலம் நிறைந்த வார இறுதி நாட்களின் மகிழ்ச்சி மழையில் நனையத் தயாராகுங்கள். பிரபல ஸ்பூஃப் காமெடி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0- வில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். எதிர்காலத்திலிருந்து கால நேரத்தைக் கடந்து பயணிக்கும் வனிதா விஜயகுமாரின் வருகை, ராஜா ஜல்சா (ரோபோ சங்கரின் நடிப்பில்), ராஜமாத்தா ஷகீலா, பேபி மாத்தா ஜாங்கிரி மதுமித்தா ஆகியோரின் கலக்கும் நகைச்சுவை, கண்டு மகிழ இந்த ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியைடியூன் செய்யுங்கள்.
சிறப்பு பார்ட்னராக கேட்பரி 5 ஸ்டார் இணைந்திருக்கின்ற கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது. கன்னித்தீவு நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடு, சிறப்பு விருந்தினர் நடிகை வனிதாவிற்கும், ராஜா ஜல்சாவிற்கும் இடையில் நிகழும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரையாடல் குறித்தது. கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பின் வழியாக கன்னித்தீவின் இந்த வார நிகழ்ச்சி உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நிச்சயம். நகைச்சுவை நடிகர் அமுதவாணன் பவர் ஸ்டாராக வலம் வருவது இந்நிகழ்ச்சியின் சுவையை இன்னும் தாறுமாறாகக் கூட்டுகிறது.
இந்நிகழ்ச்சி பற்றி நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது: “ கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 – ன் ஒரு அங்கமாக பங்கேற்றது, நம்ப முடியாத ஒரு வியக்க வைக்கும் அனுபவமாகும். திரைப்பட உலகைச் சேர்ந்த பல நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் அற்புதமான கலவையாக இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் இருக்கிறது. கலர்ஸ் தமிழ் போன்ற சிறப்பான சேனலுடனும், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருடனும் சேர்ந்து பணியாற்றியது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது மிகவும் ஆனந்தமாக ரசித்து செய்த ஒரு நிகழ்ச்சி என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. என்னைப்போலவே இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் அதே அளவிற்கு மகிழ்ச்சியோடு ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் .”

கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்பது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற மிக சமீபத்திய காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ராஜா ஜல்சானந்தா மற்றும் அவர் வசிப்பிடமான கன்னித்தீவில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவை பொங்க சித்தரிக்கிறது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிற இந்நிகழ்ச்சியானது, நான்கு பிரிவுகளாக இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் மற்றதைவிட அதிக கேளிக்கை நிறைந்ததாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். பிரபல காமெடியனும், நடிகருமான ரோபோ சங்கருடன் பிரபல சின்னத்திரை கலைஞரும், நடிகையுமான மதுமிதா, பேபி மாத என்ற கதாபாத்திரத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். புகழ்பெற்ற நடிகை ஷகிலா ராஜமாதாவாக இதில் இணைந்திருப்பது இந்நிகழ்ச்சியின் கிளுகிளுப்பை இன்னும் உயர்த்துகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த காமெடி கிளப்பில் ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணன், மாதா ஜிங்காராவாக நடிகை அன்ன பாரதியும், மாதா ஜால்ராவாக நர்மதாவும், தீவின் பிஆர்ஓ பிச்சுமணியாக அடாவடி அன்சரும் மற்றும் கலையரசனாக நடிகர் அமுதவாணனும் இணைந்திருக்கின்றனர். பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்கு கலையரசனின் குழுவினராக பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோர் செய்யும் சேட்டைகளும், நடிப்பும் சிறப்பான பங்களிப்பை செய்கின்றன.


