அதிக திரைகளில் வெளியாகும் ‘டீமன்’ திரைப்படம்!

0

Loading

தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நதி நடிக்கும் ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது!

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘டீமன்’ படத்தினை தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது குறித்தது இயக்குநர் ரமேஷ் பழனிவேல் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் ‘டீமன்’ படத்திற்கான திரையரங்க எண்ணிக்கையும் அதிகமாகக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட 150 திரைகள் ’டீமன்’ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. ரசிகர்களும் ஊடகங்களும் படத்தைப் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும்” என்றார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்க, கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ’டீமன்’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*
எழுத்து, இயக்கம்: ரமேஷ் பழனிவேல்,
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் MFI
படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்,
கலை: விஜய் ராஜன்,
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா,
தயாரிப்பு நிர்வாகி: குமார் வீரப்பசாமி,
சண்டைக்காட்சிகள்: ராக் பிரபு,
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்,
ஒலிக்கலவை: ஹரிஷ்,
ஒலி வடிவமைப்பு: ராஜு ஆல்பர்ட்,
VFX & DI: Accel Media,
வண்ணம்: ஜி.எஸ்.முத்து,
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: வி.பாலகிருஷ்ணன்,
படங்கள்: முத்து வேல்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

Share.

Comments are closed.