விஜய் சேதுபதிக்கு தனிப்பாடல் வெளியிடும் நடன இயக்குநர் ஸ்ரீதர்!

0

 399 total views,  1 views today

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு ‘ரசிகனின் ரசிகன்’ என்ற தனிப் பாடலை உருவாக்கி சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற தனிப்பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக உருவாக்கி சமர்ப்பணம் செய்யப் போவதாகவும் அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

“அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த தனிப்பாடலில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று திருநங்கைகள் விருப்பத்தை தெரிவிக்க ஸ்ரீதர் மாஸ்டர் அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் வாய்ப்பளித்திருக்கிறார். இதுபோல பாகுபாடின்றி எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைத்து, ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் மற்றும் பாரத் யுனிவர்சிட்டியின் உறுதுணையோடு ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி வரும் இந்தப் பாடல் விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களிடமும் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share.

Comments are closed.