Vijay Antony as Reel & Real Hero of Tamil Cinema!

0

 165 total views,  1 views today

இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை …

இதற்கு ஒரு முற்றுபுள்ளி வராதா, எங்கள் பாரங்களை தோளோடு தோள் சேர்த்து தூக்கி செல்ல யாரும் வரமாட்டார்களா என நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் போது தமிழ்சினிமாவின் தற்போது தவிர்க்க இயலாத ஹீரோ விஜய் ஆண்டனி அவர்கள் தாமாகவே முன்வந்து தனது சம்பளத்தில் 25% வேண்டாம் என அறிவித்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார்

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் , நல்ல மனிதராகவும் இருப்பதால் மட்டுமே திரு.விஜய் ஆண்டனி அவர்கள் தயாரிப்பாளர்கள் சார்பாக யோசித்து எங்கள் வலியை உணர்ந்து இப்படி ஒரு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளார்

இதன் மூலம் சில கோடிகளை அவர் இழக்கலாம் , ஆனால் பல கோடி நெஞ்சங்களில் நிலைத்துவிட்டார் , கொரானாவிற்கு பின் வரும் கடின காலக்கட்டங்களில் சினிமாத்துறை என்ன ஆகும் ? எப்படி இந்த இழப்புகளில் இருந்து முன்னேறும் என்ற அனைவரும் கலங்கி நிற்கும் போது ஒரு வழிகாட்டியாக , ஒரு முன்மாதிரியாக விஜய் ஆண்டனி தற்போது வெளிவந்துள்ளார் , இவரைபோல மற்ற அனைத்து நடிகர், நடிகைகள் ,டெக்னிசியன்கள் அனைவரும் இதைபோல சம்பளத்தை குறைத்து பாரத்தை தயாரிப்பாளருடன் தோளில் சுமந்து செல்ல தயாராக இருந்தால் எந்த இடர் வரினும் தமிழ்சினிமா வீழாது, பீனிக்ஸ் போல எழுந்து நிற்கும்

இது நாம் ஒன்றினையும் நேரம் , எங்களுக்காக தோள் கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பில் ஒரு பெரும் நன்றியை தெரிவிததுக்கொள்கிறேன்.

Ravinder Chandrasekhar

Libra Productions

Share.

Comments are closed.

CLOSE
CLOSE