Thursday, January 23

இரு மொழிப்படமாக உருவாகும் ‘விக்ரம் கே தாஸ்’

Loading

எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரே நேரத்தில் உருவாகும்
இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’ தொடக்கம்!

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம் ,விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை.

அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் ‘விக்ரம் கே தாஸ்’! இந்தப் பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பதை உணர முடிகிறது.இப்படத்தை
எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எட்டாவது திரைப்படமாக ‘விக்ரம் கே தாஸ் ‘ உருவாகவுள்ளது. இப்படத்தில் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் கஞ்சர்லா உபேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார் .இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளர் பாலு பொலிச்சர்லா இயக்குகிறார். பாடல்களை சீர்காழி சிற்பி எழுதுகிறார் .விஜய் ஜெ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார் . கிரேசன் எடிட்டிங் செய்கிறார். பயர் கார்த்திக் சண்டை இயக்குநராகப் பணி புரிகிறார் .தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.