வயலின் பத்மா – செலக்ட் கிளப்

0

 327 total views,  1 views today

“இசை எல்லைகள் கடந்தது” என்பது அனைவரும் அறிந்தது. அத்தகைய இசையை, சிலருக்கு ரசித்து கேட்க பிடிக்கும்; சிலருக்கோ பாடுவதற்கும், இசைக்கருவிகளை இசைப்பதற்கும் பிடிக்கும்; இன்னும் சிலருக்கோ இதை கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமும் தயக்கமும் இருக்கும்.
 
அந்த தயக்கத்தை போக்கும் விதமாகவும், ஆர்வமுள்ள அனைவரும் இசையை கற்றுக்கொள்ளும் வகையிலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளருமான ‘கலைமாமணி’ பத்மா ஷங்கர், ஒரு அருமையான வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கிறார்.
 
இந்த புதிய முயற்சி, இசையை கற்றுகொள்ள ஆர்வமுடையவர்கள் அனைவரையும், முதல் முறையாக ஒரே குடையின் கீழ், ‘வயலின் பத்மா – செலக்ட் கிளப்’ எனும் டிஜிட்டல் தளத்தின் மூலம் ஒன்றிணைக்கிறது.
 
மிக நேர்த்தியான கல்வி திட்டத்தின் மூலம் இந்த முயற்சி lஇணையவழியில் முன்னெடுக்கப்படுகிறது. 
 
பாரம்பரியத்தையும், புதிய தொழிட்நுட்ப முன்னேற்றங்களையும் உள்ளடக்கிய இந்த முயற்சி, ஒருவரது இனம், மொழி, நாடு, கண்டம் கடந்து, தாங்கள் விரும்பிய இசையை ஒரு சர்வதேச புகழ் பெற்ற கலைஞரிடம், சிறந்த கல்வியாளரிடம் பயிலும் அரிய வாய்ப்பை வழங்குகிறது. 
 
மேலும், அந்தந்த பாடத்திட்டத்திற்கேற்ப, குறிப்பிட்ட கால இடைவெளியில், முன் அனுமதி பெற்று காணொளி வாயிலாக உங்கள் சந்தேகங்களை நீங்களே அவரிடம் கேட்டு, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  
 
‘கலைமாமணி’ பத்மா ஷங்கர்:
பத்மா ஷங்கர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளர். அவர் தனது அழகான இசை பாவம், படைப்பாற்றல், கலை நயம் மற்றும் ஆத்மார்த்தமான இசைநேர்த்திக்காக பெரிதும் போற்றப்படுகிறார். 
 
மிகச் சிறந்த வயலின் இசை மேதையான பத்மபூஷன் ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன் அவர்களின் பிரத்யேக மாணவி. நேரடியாக அவரிடம் வயலின் கற்ற சிறப்புடையவர். இசையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள பத்மா, தற்போது ஷங்கர் மகாதேவன் அகாடமியில் பாடத்திட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். 
 
மேலும் தகவல்களுக்கு: www.violinpadmashankar.com
Share.

Comments are closed.