நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’

0

 60 total views,  1 views today

நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’
——–
குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஆரம்பம்

~2022 ஜனவரி 24-ம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை “கோல்மால் ஜுனியர்” மாலை 5.00 மணிக்கும் மற்றும் “ருத்ரா: பூம் சிக் சிக் பூம்”, மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ~

சென்னை, 21 ஜனவரி, 2022: வகுப்புகளை முடித்தபிறகு தங்களுக்கு பிடித்தமான நிக்டூன்ஸ் – ஐ பார்ப்பதற்காக அதை டியூன் செய்வதில் தான் குழந்தைகளுக்கான மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், நிக்கலோடியோன் குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பகுதியை ‘நிக் நேரம்’ என்று ஒளிபரப்புவதன் மூலம் இளம் ரசிகர்களை வசீகரிக்க தயாராக இருக்கிறது. இந்த சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 ஜனவரி 24 – ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கோல்மால் ஜுனியர் மற்றும் ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற இரண்டு புத்தம் புதிய அனிமேஷன் தொடர்களை மாலை 5.00 மணி மற்றும் 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பும்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளின் வழியாக இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டும் ஒரு செயல்முயற்சியாக நிக்கலோடியோன் ஃபிரான்சைஸ், கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு மக்கள் விரும்பி பார்க்கின்ற அவர்களது மொழியிலேயே நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது. பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படைப்பாக்கமான கோல்மால் ஜுனியர், அவரது சொந்த நகைச்சுவை திரைப்படத் தொடரான ‘கோல்மால்’ என்பதிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கிறது. சன் சிட்டி மற்றும் கால் சிட்டி என்ற கற்பனையில் படைக்கப்பட்ட மேஜிக் நகரங்களை பின்புலமாக கொண்ட ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற தொடர் தனது அமானுஷ்யமான சக்திகளை இன்னும் கூர்மையாக்க கற்றுக்கொள்கின்ற 9 வயதான இளம் மெஜிஸியனின் கதையை சுவைபட சித்தரிக்கிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இப்புதிய நிகழ்ச்சிகள் பற்றி கூறியதாவது: “தற்போது ஒளிபரப்பப்படும் எமது சமீபத்திய நிகழ்ச்சிகளின் சிறப்பான வெற்றிக்குப் பிறகு இரு அனிமேஷன் தொடர்களை நம் கலர்ஸ் தமிழ் தொகுப்பில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்களது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமாக இருந்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார்களின் அபிமான தொலைக்காட்சியாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள ‘நிக் நேரம்’ எங்களுக்கு உதவும் என்று நாங்கள் இப்போது உறுதியாக நம்புகிறோம். நமது நாட்டு கலாச்சார சூழலுக்கேற்ற இந்த புதிய பிரிவு தமிழ் பொழுதுபோக்கு தளத்தில் மக்களால் அதிகம் விரும்பப்படும் குடும்ப பொழுதுபோக்கு சேனலாக உருவாக வேண்டுமென்ற கலர்ஸ் தமிழின் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக இது அமையும்.
வயாகாம்18, கிட்ஸ் டிவி நெட்வொர்க்கின் கிரியேட்டிவ், கான்டென்ட் மற்றும் ரிசர்ச் பிரிவின் தலைவர் அனு சிக்கா தமிழ் பார்வையாளர்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வது குறித்து பேசுகையில், “எங்கள் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை இன்னும் பரவலான பார்வையாளர்கள் தொகுப்பிற்கு இவ்வாறு செய்வதுதான் நிக்கலோடியோன் – ல் எங்களது முனைப்பாகவும், செயல்பாடாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. எங்களது குழந்தைகளுக்கான தொகுப்பிற்கு தமிழ் ஒரு முக்கியமான சந்தையாகும். ஏற்கனவே இருந்து வரும் பார்வையாளர்களோடு இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டவும் மற்றும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறவாறு உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிற நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கவும், கலர்ஸ் தமிழின் செல்வாக்கும், பிரபல்யமும் எங்களுக்கு உதவும். கலர்ஸ் தமிழ் உடனான இந்த ஒருங்கிணைப்பு செயல்பாடு குறித்து நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். இனிவரும் காலத்திலும் இதுபோன்ற சாத்தியங்களை ஆராய்வதையும் மற்றும் ஒத்துழைப்பு செயல்பாட்டையும் நாங்கள் தொடர்வோம்.” என்று கூறினார்.

உங்களது அன்புக்குரிய செல்லங்களுடன் உங்கள் மாலைப்பொழுதுகளை மகிழ்ச்சியோடு பொழுதுபோக்க ஜனவரி 24 இந்த திங்களன்று முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் இரண்டு அற்புதமான அனிமேஷன் நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் மாலை 5.00 மணியிலிருந்து, 6.00 மணி வரை தவறாமல் கண்டு ரசியுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண Voot Kids – ஐ டியூன் செய்யலாம்.

Share.

Comments are closed.