Sunday, November 29

Author: admin

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம்!

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம்!

News
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா' ஆகிய படங்களுக்கு இசையமைத்து பான் இந்திய அளவிலான இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப், 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். தனித்துவமான இசை மற்றும் உணர்வுபூர்வமான பின்னணி இசை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஹேஷாம். இவர் இசையில் உருவான பாடல்கள் இணையத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், 'ஒன்ஸ்மோர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இ...
பான் இந்தியப் படமாக வெளியாகும் “மட்கா”!

பான் இந்தியப் படமாக வெளியாகும் “மட்கா”!

News
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது ! மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது. இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், ல...
‘டாடா’ புகழ் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி!

‘டாடா’ புகழ் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி!

News
'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள 'ஜெ ஆர் 34' என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. 'அகிலன்' மற்றும் 'பி...

‘ஆலன்’ படத்தை ஒரு கவித்துவமான படைப்பாக பார்க்கிறேன்”_ தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

News
நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! 3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழ...
ஃபேன்டஸி படத்தின் டிரைலரை வெளியிட்ட சிலம்பரசன் டி.ஆர்.

ஃபேன்டஸி படத்தின் டிரைலரை வெளியிட்ட சிலம்பரசன் டி.ஆர்.

News
ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக 'ராக்கெட் டிரைவர்' உருவாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், 'ராக்கெட் டிரைவர்' புதிய படமாக இணையும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் சிலம்பரசனுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர். 'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குட...
திரைப்படமான எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதை!

திரைப்படமான எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதை!

News
அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு! பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் "அங்கம்மாள்". இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் இதுதான் முதன்முறை. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள *அங்கம்மாள்* படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெருமாள் முருகனின் ‘கோடித்துணிக்கு புதிய உருவத்தை தரும் விதமாக அங்கம்மாள் உருவாகியுள்ளது. *நட...
அக்-11ல் வெளியாகும் ‘பிளாக்’ திரைப்படம்!

அக்-11ல் வெளியாகும் ‘பிளாக்’ திரைப்படம்!

News
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது. கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது. பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் யூட்யூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நிறைய பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்...
சென்னையில் ஓர் அதிரடி இசை விழா!

சென்னையில் ஓர் அதிரடி இசை விழா!

News
லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் சென்னை ட்ரம் பெஸ்ட் 2024 : சென்னையில் ஓர் அதிரடி இசை விழா! லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் சென்னையில் ஒரு அதிரடி இசை விழா நடைபெற உள்ளது.அதில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர். தனது இசைத் திறமைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர். உலக அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி 2019-ல் சிறந்த வெளிப்பாட்டாளருக்காண ஏழு கோடி ரூபாய் பரிசைப் பெற்றவர். அவர் பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர். அவரது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்கிற இசை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிரம்மர்கள் ஆறுபேர் வரவிருக்கிறார்கள். விழா பற்றி லிடியன் பேசும் போது, "இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற...
தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

News
'தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது! தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், 'தளபதி' விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "தளபதி 69" துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது. "தளபதி 69" படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள...
ஆரகன் _ விமர்சனம்

ஆரகன் _ விமர்சனம்

Reviews
ஆரகன் விமர்சனம் தவம் இருக்கும் முனிவர் ஒருவரை விஷப்பாம்பு ஒன்று கொத்த வருகையில், அவரது சீடன் முனிவரை காப்பாற்றுகிறார். உயிரைக் காப்பாற்றிய சீடனுக்கு என்ன வரம் வேண்டும் என முனிவர் கேட்க, அந்த சீடனோ எப்போதும் இளமையாக இருப்பதற்கு வரம் கேட்கிறான். அடுத்ததாக காலில் இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்ட முதிய பெண் ஒருத்தி (கலைச்செல்வி) அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மூன்றாவதாக இளம் காதல் ஜோடியை பற்றிய கதை. காதலனாக மைக்கேல் தங்கதுரையும், காதலியாக கவிப்பிரியாவும் வருகின்றனர். பிரதான கதையாக நீள்கிறது இந்த காதல் ஜோடியின் கதை. திருமணத்திற்கு பின் சொந்தமாக வியாபாரம் நடத்தி வசதியாக வாழ நினைக்கும் காதலன் மைக்கேல் தங்கதுரை சில லட்சங்களை கையில் வைத்திருக்கிறார். மேலும் ஓரிரு லட்சங்கள் தேவைப்படுகிறது. எனவே காதலி கவிப்பிரியா வேலைக்கு சென்று அதை சம்பாதிக்க முடிவு செய்கிறார். வனாந்தர மலைப்பகுதியில் தன...