Sunday, November 29

Author: admin

‘லப்பர் பந்து’ படத்தில் நடிகர் டிஎஸ்கேவின் நடிப்பை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

‘லப்பர் பந்து’ படத்தில் நடிகர் டிஎஸ்கேவின் நடிப்பை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

News
’லப்பர் பந்து’ வெற்றியை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் டிஎஸ்கே! கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் சாம்பியன் பட்டம் வென்று தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமானவர் நடிகர் டிஎஸ்கே. இதனைத் தொடர்ந்து ‘பெட்ரோமாக்ஸ்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவிலும் ஒரு நகைச்சுவை நடிகராக நுழைந்து கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள டிஎஸ்கே, இதுவரை தனது பாணியாக இருந்த நகைச்சுவை நடிப்பிலிருந்து விலகி சற்று வில்லத்தனம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ்...
நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வரும்”மட்கா”!

நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வரும்”மட்கா”!

News
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது ! ரெட்ரோ ஸ்டைலில் ​​இதன் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது! மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான "மட்கா" தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக்​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. கருணா குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை, வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில், டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் மட்கா ஆகும். படத்தின் ...
‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

News
‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா! ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகள...
‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்!

‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்!

News
குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் மாக்கியவெல்லி காப்பியம் வெளியானது, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகி...
ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாரிக்கும் சத்யா மூவிஸ் !

ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாரிக்கும் சத்யா மூவிஸ் !

News
“தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாராகிறது ! சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த அருளாளர் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது. திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன். மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்...
ரூ. 304 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘தேவரா’!

ரூ. 304 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘தேவரா’!

News
மாஸ் நாயகன் நடிகர் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் உலகளவில் ரூ. 304 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது! இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ’தேவரா’. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா. கே, தயாரித்த இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்கினார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 172 கோடி வசூலை ஈட்டி பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றது. வார இறுதியிலும் இதை தக்க வைத்தது. படம் வெளியான மூன்று நாட்களில் அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ. 304 கோடிகளை வசூலித்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, ‘தேவரா’ படம் தெலுங்கில் நல்ல...
1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒளிபரப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர்!

1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒளிபரப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர்!

News
தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் ஒளிபரப்படுகிறது!* 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே இப்போது தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்‌ஷன் என டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பல தருண...
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்த ‘நீல நிறச் சூரியன்’!

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்த ‘நீல நிறச் சூரியன்’!

News
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ; அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு! திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் xforia Igene நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.. இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது.. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது. “ஒரு ஆ...
ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா !

ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா !

News
ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா ! திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற பருத்திவீரன் சுஜாதா, தற்போது சன் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோவான 'டாப் குக் டூப் குக் ' நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் வென்று டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார். ஆரம்பத்தில் ஓரிரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டிருந்த பருத்திவீரன் சுஜாதா முதல் முறையாக பங்குபெற்ற முழுநீள பெரிய ரியாலிட்டி ஷோ இதுதான். அதில் நடக்கும் சமையல் போட்டியில் ஆரம்பத்தில் இவர் எளிதாக வைத்த பூசணிக்காய் சாம்பாருக்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவரே டைட்டில் வின்னராகி இருப்பதுதான் ஆச்சரியம். அவரிடம் பேசியபோது : சினிமாவில் இருந்து டிவி வந்து ,இந்த ஷோவில் கடந்து வந்த பாதை எப்படி உள்ளது? நான் மதுரையில் இருந்து கொண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் தயா...
ரிட்லி ஸ்காட் இயக்கிய Gladiator II டிரெய்லர்!

ரிட்லி ஸ்காட் இயக்கிய Gladiator II டிரெய்லர்!

News
கிளர்ச்சியின் புதிய மரபு தொடங்கும் - புகழ்பெற்ற ரிட்லி ஸ்காட் இயக்கிய Gladiator II இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது! காவிய பயணம் தொடர்கிறது, பார்வையாளர்களை பண்டைய ரோமின் மிருகத்தனமான உலகத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறது, அங்கு சக்தி, பழிவாங்கல் மற்றும் மரியாதை ஆகியவை மோதுகின்றன. சமீபத்திய டிரெய்லரை இங்கே பாருங்கள் - ● ஆங்கிலம் - https://www.instagram.com/reel/DAQr5LFCetG/?igsh=aGEyeDdtNWRsN2ty ● இந்தி - https://www.instagram.com/reel/DAQsJxviPYo/?igsh=MTduNTd3ZHlzYmVqeQ== ● தமிழ் - https://www.instagram.com/reel/DAQsZaPibjN/?igsh=dGUydDV2cHg1bTM4 ● தெலுங்கு - https://www.instagram.com/reel/DAQsuvrC1_Y/?igsh=MXI2ZnJ3cHNneHdldA== கிளாடியேட்டர் II டிரெய்லர், இப்போது மிருகத்தனமான மற்றும் கொடுங்கோல் பேரரசர்களால் ஆளப்படும் பண்டைய ரோமின் அதிர்ச்சியூட்ட...