Sunday, November 29

Author: admin

நடிகர் ஜெயராம் கலந்து கொண்ட ‘பாரத் யாத்ரா’ நிகழ்வு!

நடிகர் ஜெயராம் கலந்து கொண்ட ‘பாரத் யாத்ரா’ நிகழ்வு!

News
'பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டார்! சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன...
நடிகர் மணிகண்டன்  நடிக்கும் ‘குடும்பஸ்தன்’

நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’

News
சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது! கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே ! ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப...
சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர்....
’சாரி’ படத்தின் நாயகி ஆராத்யா தேவியின் பிறந்தநாளை  கொண்டாடிய படக்குழு!

’சாரி’ படத்தின் நாயகி ஆராத்யா தேவியின் பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!

News
’சாரி’ படத்தின் கதாநாயகி ஆராத்யா தேவியின் பிறந்தநாளை படக்குழு உற்சாகமாக கொண்டாடியது! ’சாரி’ ஆராத்யா தேவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சத்யா, இயக்குநர் கிரி கமல், ’ராம்கோபால் வர்மா மற்றும் தயாரிப்பாளர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். *‘சாரி’ படப்பிடிப்பு முடிவடைந்து இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிட தயாராகி வருகிறது....
சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் படம்!

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் படம்!

News
சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்க...
செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !

செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !

News
சென்னையில் "ஜல்லிக்கட்டு" செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு ! கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. இன்றைய விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது… க...
ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் “டிமான்ட்டி காலனி 2”

ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் “டிமான்ட்டி காலனி 2”

News
அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். மிகச்சிறந்த பட...
ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழா!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழா!

News
சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது! செப்டம்பர் 27, 2024- சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் இன்று MOSFILM 100- வது ஆண்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தியது. இந்த நிகழ்வு , ரஷ்யாவின் மிகச் சிறந்த திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான MOSFILM யின் வளமான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு, 3 நாள் சினிமா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும் அமைந்திருந்தது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத் தலைவர் மேதகு. வலேரி கோட்சேவ் மற்றும் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் துணைத் தூதரும் இயக்குநருமான திரு. அலெக்சாண்டர் டோடோனோவ் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் இருவருமே இரு...
இறுதி முயற்சி படத்தின் டீசர் வெளியீடு !

இறுதி முயற்சி படத்தின் டீசர் வெளியீடு !

News
"வரம் " சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி படத்தின் டீசர் வெளியீடு ! வரம் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கத்தில், நடிகர் ரஞ்சித் மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி திரைப்படத்தின் டீசரை, இயக்குநர் பாக்யராஜ் வெளியிட்டுள்ளார். அசத்தலான இந்த டிரெய்லர் தற்போது, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக...
இந்திக்கு செல்லும் கடைசி உலகப்போர்   திரைப்படம் !

இந்திக்கு செல்லும் கடைசி உலகப்போர்   திரைப்படம் !

News
அக்டோபர் 4 ஆம் தேதி வட இந்தியாவில் வெளியாகும் கடைசி உலகப்போர்   திரைப்படம் !! முன்னணி ராப் பாடகர்,  நடிகர், இயக்குநர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம், தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, வட இந்தியா முழுக்க, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தியில் வெளியாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி, இசையமைத்து உருவாகியிருந்த  "கடைசி உலகப்போர்" கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியானது.  மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த  இப்படம், ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியங்களைத் தந்து, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமிருந்து பெரும் பாராட்டு...