குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்!
குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது
இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்பிர...








