Sunday, November 29

Author: admin

சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024!

சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024!

News
சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024! வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 நடைபெற்றது இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா சந்தீப்ஆனந்த், டாக்டர் சந்தீப் ஆனந்த் விழாவை துவங்கி வைத்தார்கள். 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி, கன்னடம் மற்றும் இந்திய பிற மொழிப்படங்களும், ஆங்கில மொழிப்படங்களும், பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும...
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

News
அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. எஸ் ஆர் எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ச...
100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’!

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’!

News
100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் 'தங்கலான்'! *உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'* ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீயா...
சர்வதேச திரைப்பட விழாவில் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’! திரையிடப்படும்

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’! திரையிடப்படும்

News
அனைவருக்கும் வணக்கம், அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார், ஆகியோர் நடித்து என். ஆர்.ரகுநந்தன் இசையில் அசோக் குமாரின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் இத்திருவிழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது. 22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இது வரை தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் செப்டம்ப...
டோவினோ தாமஸின் ஏஆர்எம் பட டிரெய்லர் !

டோவினோ தாமஸின் ஏஆர்எம் பட டிரெய்லர் !

News
பிரமிப்பில் ஆழ்த்தும் டோவினோ தாமஸின் ஏஆர்எம் பட பிரம்மாண்ட டிரெய்லர் ! மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பான் இந்திய படைப்பாக, மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. "மின்னல் முரளி" மற்றும் "2018 - எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ" ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுதும்  கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸ், அடுத்ததாக பிரம்மாண்டமான "ARM" ஏஆர்எம் எனும் - ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் மூலம் அசத்தவுள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது. மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பிரம்மாண்ட ப...
கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024

கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024

News
சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா! வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத...
சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை” – ‘செம்பியன் மாதேவி’ பட இயக்குநர், தயாரிப்பாளர் வருத்தம்!

சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை” – ‘செம்பியன் மாதேவி’ பட இயக்குநர், தயாரிப்பாளர் வருத்தம்!

News
"என் சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை" - ‘செம்பியன் மாதேவி’ பட இயக்குநர், தயாரிப்பாளர் வருத்தம்! சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தற்போதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது - ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன் 8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு இசையும் அமைத்திருக்கிறார். நாளை (ஆக.30) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையிடப்பட்டது. சிறப்பு காட்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக் கொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான லோக பத்மநாபன், “செம்பியன் மாதேவி முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தற்போத...
சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ திரைப்படம்!

சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ திரைப்படம்!

News
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்! நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்கு...
பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை!

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை!

News
ஒரே நாள் இரவு! இரண்டு கதாபாத்திரங்கள்! பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வித்தியாசமான த்ரில்லர் கதை 'பிளாக்'! கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ். மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் . ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படி பட்ட கதை தான் #பிளாக். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க...
‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

News
'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நட...