Sunday, November 29

Author: admin

விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து  ‘கோட்’  திரைப்படம்!

விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து ‘கோட்’ திரைப்படம்!

News
தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு! ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ('கோட்') திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட...
“‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம்” _ நானி!

“‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம்” _ நானி!

News
'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யா 'ஸ் சாட்டர்டே' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், 'நேச்சுரல் ஸ்டார்' நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' சூர்யா'ஸ் சாட்டர்டே' எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை அதிதி பாலன் பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்க...
வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

News
  பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது! இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ரிதா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சாம் சி.எஸ் பின்னணி இசையமைக்கிறார். பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் ஸ்டண்ட் சில்வா. கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். பாலா-அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படம் என்பதாலும் ஏற்கனவே வெளியான ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ...
எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாய் எகிற வைத்த’கோட்’ டிரைலர்!

எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாய் எகிற வைத்த’கோட்’ டிரைலர்!

News
தளபதி விஜய்யின் 'கோட்' டிரைலர் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாய் எகிற வைத்துள்ளது: அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை காண ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்! ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் 'கோட்' டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான 'கோட்' மீதான எதிர்பார்ப்பை பரபரப்பு காட்சிகளுடன் கூடிய டிரைலர் இன்னும் அதிகமாக்கியுள்ளது. Tamil Trailer: https://bit.ly/46S5BPX ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள, வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'கோட்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கு...
மீண்டும் ஒரு பேபி ஷாலினி!

மீண்டும் ஒரு பேபி ஷாலினி!

News
  பேபி ஷாலினி போல தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஒரு குட்டி நடிகை! அப்பா மீடியா தயாரிப்பில் "எங்க அப்பா" என்ற தலைப்பில் மியூசிக்கல் ஆல்பம் தயாராகி உள்ளது! இதில் ஐந்து வயது குட்டி நடிகை லக்‌ஷனா ரிஷி நடித்துள்ளார். லக்‌ஷனா ரிஷி இரண்டு வயதில் இருந்தே நடிப்பின் மீது பேரார்வம் கொண்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முகபாவனையோடு பேசி வந்தார். தற்போது 'எங்க அப்பா' படப்பிடிப்பில் மலை, காடு, நதி, அருவி ஆகிய பகுதிகளில் பயம் இல்லாமல் நடித்து, படக்குழுவினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். அப்பாவை இறைவனாக நினைக்கும் குழந்தை. தந்தை மகள் அன்பு தான் கதை. எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அப்பா மீடியா. கேரள வனப்பகுதி ம...
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!

News
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா! 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபுடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான # பிரபாஸ் ஹனு - இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. 'சலார்', 'கல்கி 2898 கிபி' என அடுத்தடுத்து வெற்றி பெற்ற படங்களில் நடித்த பிரபாஸ் அடுத்ததாக இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்கிறார். கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக '# பிரபாஸ் ஹனு' எனும் இந்த படத்தில் இணைகிறார்கள். இந்த கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால்.. இந்த படைப்பின் மீதான எதிர்பார்ப்ப...
சமகால பிரச்சனைகளை எதிரொலிக்கும் படமாக உருவாகும்’டோபமைன் @ 2.22’!

சமகால பிரச்சனைகளை எதிரொலிக்கும் படமாக உருவாகும்’டோபமைன் @ 2.22’!

News
ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’! எளிமையான, புது சிந்தைனைகளுடன் வரும் கதைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க திரை ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். அதுபோன்ற கதைகள் வரும்போது நிச்சயம் அது பெரும் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோன்ற பல கதைகள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22' படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர், நடிகர் திரவ் பகிர்ந்துகொண்டதாவது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த...
மலையாள ஆந்தாலஜி தொகுப்பான ‘மனோரதங்கள்’ வெளியீட்டு விழா!

மலையாள ஆந்தாலஜி தொகுப்பான ‘மனோரதங்கள்’ வெளியீட்டு விழா!

News
ZEE5 இன் மலையாள ஆந்தாலஜி தொகுப்பான ‘மனோரதங்கள்’ வெளியீட்டு விழாவில், நட்சத்திர நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார். ~ ZEE5 இன் 'மனோரதங்கள்,' மலையாள சினிமாவின் சிறந்த திறமைகளை முன்னிலைப்படுத்தும் ஒன்பது வசீகரிக்கும் கதைகளுடன் M.T வாசுதேவன் நாயரின் கற்பனை உலகத்துக்கான பயணமாக அமைந்துள்ளது ~ ~'மனோரதங்கள்', இப்போது மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ZEE5 இல் கிடைக்கிறது, இது ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு மதிப்பிற்குரிய திரைப்பட இயக்குநர்களை உள்ளடக்கிய இந்தியாவின் மிகச்சிறப்பான படைப்பாகும். ~ இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 , மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும், வரலாற்றுப் படைப்பான ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பி...
’விடாமுயற்சி’ படத்திலிருந்து நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர்!

’விடாமுயற்சி’ படத்திலிருந்து நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர்!

News
 அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து  நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது! நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இயக்குநர் மகிழ்திருமேனி நிகில் பற்றி கூறும்போது, “திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிகர்கள் பலர் பணிபுரி...
அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா!

அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா!

News
'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா! ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ ...