Sunday, November 29

Author: admin

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!

News
இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்! கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம். சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் 'கூலி' திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மி...
மெல்பர்ன் இந்தியப் பட விழாவில் விருது பெற்ற நித்திலன் சாமிநாதன்!

மெல்பர்ன் இந்தியப் பட விழாவில் விருது பெற்ற நித்திலன் சாமிநாதன்!

News
மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந'ருக்கான விருதை வென்றிருக்கிறார்! நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival) இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி), விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்), இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா), கபீர் கான் (சந்து சாம்பியன்), ராஜ்குமார் ஹிரானி (டன்கி), மற்றும் ராகுல் சதாசிவன் (பிரமயுகம்) ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் பேசியிருப்பதாவது, "ம...
‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3

‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3

News
'கனா காணும் காலங்கள்' சீசன் 3க்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் புதிய பெப்பி பாடல், 'நியூ ஏஜ் நியூ பேட்ச்' ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற 'நியூ ஏஜ் நியூ பேட்ச்' எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது. கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு - AJ திப்பு, நடன இய...
டிமான்ட்டி காலனி _ விமர்சனம்

டிமான்ட்டி காலனி _ விமர்சனம்

News
டிமான்ட்டி காலனி _ விமர்சனம் ஏற்கெவே 2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து + அருள்நிதி கூட்டணி இணைந்து வெற்றி பெற்ற டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் தற்போது  வெளியாகி இருக்கிறது. முந்தைய பாகத்தில், நாயகன் ஸ்ரீனிவாசன் மரணமடைந்துவிடுவார். ஆனால் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என துவங்குகிறது இரண்டாம் பாகம். அதே நேரம் அவரது உயிருக்கு ஆபத்து என்கிற ட்விஸ்ட்டையும் வைக்கிறது. அவரை காப்பாற்றியது யார், ஏன் இந்த நிலை என்பதை த்ரில்லராக விவரிக்கிறது இரண்டாம் பாகம். இயக்குர் அஜய் ஞானமுத்துவுக்கு முதல் பாராட்டு. வெவ்வேறு காலகட்டங்களில் கதையை கொண்டு சென்றாலும், குழப்பியடிக்காமல்.. சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார். அடுத்த பாராட்டு அருள் நிதிக்கு. வழக்கம்போலவே - நம்ம வீட்டுப் பையன் இமேஜுடன் - இயல்பான நடிப்பை அளித்து உள்ளார். சொத்துக்கு ஆசைப்படுவது, சித்தப்பாவையே மிரட்டுவது, திகில் காட்சிகளி...
வேதா _ விமர்சனம்

வேதா _ விமர்சனம்

Reviews
வேதா _ விமர்சனம் என்னதான் அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னமும் சாதீய ஏற்றத்தாழ்வு கொடுமைகள் நிகழ்ந்தபடிதான் உள்ளன என்பதை சொல்லும் படம் வேதா. வட இந்தியாவின் பின்தங்கிய கிராமம். இந்த காலத்திலும் சாதிய அடிமை முறை நிலவுகிறது. சுற்றுப்பட்டு கிராமங்களை அடக்கிவைத்திருக்கும் ஜமீன் குடும்பத்தின் எதேச்சகாரம் தூள் பரத்துகிறது. இங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், குத்து சண்டை கற்க விரும்புகிறாள். அவளது அண்ணனும்,  ஓர் உயர் சாதி பெண்ணும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன ஆனது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம்தான் வேதா. ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக, தனது வர்க்க வலியை கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஷர்வாரி. சாதி இழிவுக்கு ஆளாவது, அதிலிருந்து மீள போராடுவது, அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ...
தங்கலான் _ விமர்சனம்

தங்கலான் _ விமர்சனம்

Uncategorized
தங்கலான் _ விமர்சனம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பீரியட் பிலிமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ப.ரஞ்சித். வெள்ளையர் காலத்தில் நடக்கிறது கதை. தங்க வயலில் வேலை செய்ய ஆட்களை தேடுகிறார் வெள்ளை அதிகாரி. ஊரில், ஜமீனிடம் அடிமையாக வாழும் நிலையிலிருந்து மீள.. ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே செல்கிறார்கள். அங்கும் அவர்களது நிலை மாறவில்லை. தங்கலான் என்கிற அவர்களது தலைவன் அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை. நாயகன் தங்கலானாக அசத்தி இருக்கிறார் விக்ரம். மனைவி மீதான காதல், குழந்தைகள் மீதான பாசம், எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை என வாழ்ந்திருக்கிறார் மனிதர். இவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒவ்வொரு காட்சியையும் சொல்ல வேண்டும். அதி அற்புதம். விக்ரமின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக ஜொலிக்கிறது தங்கலான்.  விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் கதாபாத்திர...

நடிகர் மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்திய விஜய் சேதுபதி!

News
காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தினார்! விவேக் உடன் அதிக படங்களில் காமெடியில் நடித்தவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76' ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் விஜய் சேதுபதி! என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றியோடு தெரிவித்தார் நடிகர் தெனாலி!  ...
விஜய்யின் ‘கோட்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி!

விஜய்யின் ‘கோட்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி!

News
தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர்! ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது. திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, "ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திரு...
Indian Overseas Bank Celebrates 78th Independence Day with Patriotic Fervor

Indian Overseas Bank Celebrates 78th Independence Day with Patriotic Fervor

News
Indian Overseas Bank Celebrates 78th Independence Day with Patriotic Fervor Chennai, August 15, 2024:Indian Overseas Bank (IOB), a leading public sector bank, celebrated the 78th Independence Day with great enthusiasm and pride at its Central Office. The event commenced with the hoisting of the National Flag by Shri Ajay Kumar Srivastava, Managing Director & CEO, at 08:00 hours, accompanied by the National Anthem and followed by a grand parade. The celebration was further enriched by a display of unity, as Shri Srivastava led the gathering in taking the Pledge of National Integration. In a special recognition, the bank’s volleyball team was lauded for their exceptional performances in various state-level tournaments held in Coimbatore, Bargur, Thindal, Chennai, and the Hockey Team ...
“சீயான் விக்ரம் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது”_ பா.ரஞ்சித்

“சீயான் விக்ரம் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது”_ பா.ரஞ்சித்

News
சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத...