Sunday, November 29

Author: admin

கம்யூனிச தோழராக வீரவணக்கம் படத்தில் நடிக்கும் சமுத்திரகனி!

கம்யூனிச தோழராக வீரவணக்கம் படத்தில் நடிக்கும் சமுத்திரகனி!

News
வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி! பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில் சமுத்திரக்கனி, பரத் தவிர சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரபல புரட்சி பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்க...
மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்!

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்!

News
லைக்கா புரொடக்ஷன்ஸ் - ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான' L2 : எம்புரான் ' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்! மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' L 2: எம்புரான்' எனும் திரைப்படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்றும் 'ஜான் விக் சாப்டர் 3 ' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'L 2 எம்புரான் ' எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திர...
‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைபிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் பற்றிய தங்கள் கருத்துக்களை, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது... 35 வருடங்களுக்கு முன் நான் உதவி இயக்குநர், அப்போதே .ரங்கராஜ் சாரிடம் வேலை செய்ய வேண்டும் என ஆசை, ராம்தாஸ் சார் உதவியுடன் அவர் படத்தில் வேலை செய்தேன். என்னை கண்டிப்பானவர் என சொல்வார்கள் ஆனால் அவர் படு பய...
ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !

ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !

News
இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது !! ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்' ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !! ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை உருவாக்குவதில் மாப் சீன் கடந்த இருபது ஆண்டுகளாக முன்னணி சக்தியாக இருந்து வருகிறது. மாப் சீன், ஆவதார், ட்யூன், ஜுராசிக் வேர்ல்ட், பஸ்ஸ் இன் பூட்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ், ...
வேற லெவல் அனுபவம் கொடுக்கும் ‘மர்மர்’ டிரெய்லர்!

வேற லெவல் அனுபவம் கொடுக்கும் ‘மர்மர்’ டிரெய்லர்!

News
"நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்" - மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்! தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது, "இந்தப் படத்தில் ...
நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் கொண்டாடுகிறார்கள் _ நடிகர் அப்புகுட்டி!

நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் கொண்டாடுகிறார்கள் _ நடிகர் அப்புகுட்டி!

News
ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்' என்கிறார் அப்புக்குட்டி! அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, 'ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது' என அனைவரும் பாராட்டினார்கள். விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் 'ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வ...
​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரைம் வீடியோ!

​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரைம் வீடியோ!

News
பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது!  சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது. *மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025* —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத...

கூரன் ‘படத்தைப் பாராட்டிய பார்த்திபன்!

News
'கூரன் 'படத்தைப் பாராட்டிய பார்த்திபன்! நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன் ' திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள் .நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, " எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி அவர்கள் .அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும் அவர் திரைக்கதையில் ஒரு மன்னர்.அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார்.அவரது மகன் 26 வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ் .ஏ. சி . அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த 'கூரன்' படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது .இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான...
யாஷின் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’!

யாஷின் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’!

News
யாஷின் 'டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்' இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழி திரைப்படமாக ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்டு, உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு வரலாறு படைக்கிறது! *யாஷின் 'டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ' உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்* ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக 'டாக்ஸிக் ' என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில்...

“தண்ணீர்தான் என் இளமைக்கு காரணம்” நடிகர் ரவிமோகன்!

News
"தண்ணீர்தான் என் இளமைக்கு காரணம்" நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி! தன்னுடைய இளைமைக்கு காரணமே தண்ணீர் தான் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தோயோ ஏஸ்த்தெடிக் சலூனை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், தினமும் காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகுவேன் என்று கூறினார். நாள் முழுவதும் தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க முடியும் என்று ரவி மோகன் தெரிவித்தார். ஜெயம் படத்தில் நடிப்பதற்காக மட்டுமே பார்லர் சென்றதாக கூறிய ரவி, அதன்பிறகு அழகு படுத்திக்கொள்வதற்காக அழகுநிலையங்களுக்கு தான் சென்றதே கிடையாது என்று கூறினார். தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே இருக்கக் கூடிய தோயோ கிளினிக்கிற்கு அடிக்கடி வரப்போவதாகவும் தெரிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் சகோதரி மகாலட்சுமியின் தோய...