Sunday, November 29

Author: admin

அக்‌ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்!

அக்‌ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்!

News
கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய திரைப்படமான ‘கண்ணப்பா’-வுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் மும்பையில் நடைபெற்ற சிறப்பு ஊடக நிகழ்வில் வெளியிடப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் சிங் மற்றும் படக்குழுவினர் இதில் பங்கேற்றனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான வினய் மகேஸ்வரி, வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில், திரையிடப்பட்ட கண்ணப்பா பட டீசர், பத்திரிகையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பக்தி, தியாகம் மற்றும் பிரமாண்டமான வரலாற்று விவரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும் விதத்தில் இருந்தது. முகேஷ் குமார் சிங் இயக்கிய மற்றும் எம். மோகன் பாபு தயாரித்த இப்படம், பார்வையாளர்களை பக்தி மற்றும் உணர்ச்சிபூர்வமான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டீசர் பிரதி...
நம்ம ஊரு ஹாரி பாட்டர் ‘கிங்ஸ்டன்’!

நம்ம ஊரு ஹாரி பாட்டர் ‘கிங்ஸ்டன்’!

News
"ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா! ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பல...

‘ஈரம்’ அறிவழகன் –ஆதி கூட்டணியில் இருமடங்கு எதிர்பார்ப்புடன் வெளியாகும் ‘சப்தம்’!

News
’சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்! 7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வரும் பிப்-28 (நாளை) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த...
புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரும்

புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரும்

News
புத்தம் புது பொலிவுடன் திரையினை அலங்கரிக்க வருகிறது ப்ளாக்பஸ்டர்* *“ஜெயம்” மற்றும் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படங்கள் ! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் அறிமுகமான ஜெயம் படமும், பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன் விரைவில் வெளியாகவுள்ளது. எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்தை தியேட்டர்க...
ஜூன் 20 அன்று திரைக்கு வரும் ‘குபேரா’ திரைப்படம்

ஜூன் 20 அன்று திரைக்கு வரும் ‘குபேரா’ திரைப்படம்

News
சேகர் கம்முலாவின் 'குபேரா' திரைப்படம் வெளியீட்டு தேதியை உறுதி செய்தது - ஜூன் 20,2025 அன்று ஒரு சினிமா அற்புதம் காத்திருக்கிறது! உங்கள் நாட்காட்டிகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!  தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்படைப்பாளர் சேகர் கம்முலா இயக்கத்தில் வரும் ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் 'குபேரா'வின் மூலம் கதை சொல்லலை மாற்றியமைக்க உள்ளார். தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரை உள்ளடக்கிய மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் முன்பு எப்பொழுதும் நடித்த கதாபாத்திரங்களைப் போலல்லாமல் புதுவிதமாக நடித்துள்ளதுடன், குபேரா இந்திய சினிமாவில் முத்திரை பதிக்கும் திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகிறது. தனது ஆழமான, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் நகரும் கதைகளுக்கு பெயர் பெற்ற சேகர் கம்முலா புதிய படைப்பு பிராந்தியத்திற்குள் நுழைந்து, இந்த ஆண்டின் ம...

குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்த ARரஹ்மான் தங்கை இஷ்ரத் காதிரி!

Uncategorized
ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டது! பழநிபாரதி எழுதிய கொஞ்சி கொஞ்சி பேசவா... என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய வல்லினமா மெல்லினமா இடையினமா... என்ற இரு பாடல்களை பாடியுள்ளார். பாடியதோடு மட்டும் இல்லாமல், பாடல் காட்சி படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்த போது, பாடல் காட்சியில் பங்கேற்று, படத்தின் மேக்கிங் பாடலுக்கு குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்துள்ளார் இஷ்ரத் காதிரி. ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி". நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்த...
பட்டையை கிளப்பும் ‘தல்வார்’ கிளிம்ப்ஸ் வீடியோ!

பட்டையை கிளப்பும் ‘தல்வார்’ கிளிம்ப்ஸ் வீடியோ!

News
எதிர்பார்ப்பை எகிற செய்த ஆகாஷ் ஜெகன்நாத்தின் 'தல்வார்' கிளிம்ப்ஸ் வீடியோ! பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவரது மகன் ஆகாஷ் ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. 'தல்வார்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இ.எல்.வி. குழும நிறுவனங்கள் மற்றும் வார்னிக் ஸ்டூடியோஸ் நிறுவனர் டாக்டர் பாஸ்கர் இ.எல்.வி. இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காசி பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார். ...

SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd நிறுவனங்கள் இணைப்பு!

News
SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் லண்டனின் மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் தங்களது லேண்ட்மார்க் இணைப்பை அறிவித்தன !! இவர்கள் இருவரும் இணைந்து திரைத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளன ! உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு, மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் உலகளவில் உள்ள பொழுதுபோக்கு துறையில், பிரம்மாண்டம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் அற்புதமான பல புதிய முயற்சிகளை இந்த கூட்டாண்மை நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும். SRAM & MRAM குழுமத்தின் தலைவர் டாக்டர். சைலேஷ் எல். ஹீரானந்தானி மற்றும் Paradigm Pictures-யின் தலைவர் திரு. அர்விந்த் தர்மராஜ் ஆகியோர...
மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!

மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!

News
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி, ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி 2'!* ‘திரௌபதி’யை பெரிய திரைகளில் வரவேற்கும் நேரம் இது. இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோர் இணைந்த 'ருத்ர தாண்டவம்' மற்றும் 'திரௌபதி' படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. இப்போது இவர்கள் மீண்டும் 'திரௌபதி 2' படத்தில் இணைந்துள்ளனர். இம்முறை, 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளிய...
சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Uncategorized
சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - மகாசிவராத்திரி சிறப்பு தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு ! நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திரைப்படத்தில் எவ்வித தயக்கமும் இல்லாமல் எதிர்மறையான காசி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரன்னர்’ மூலம் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகி வருகிறார்.. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட (Sports Drama) கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சிதம்பரம் A அன்பழகன் இயக்க, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘ பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’ போன்ற திரைப்படங்கள் திரையுலகில் நல்ல வரவேற...