ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்!
இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட 'பர்பாத்' பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்!
சையாரா படத்தின் தலைப்பு பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள 'பர்பாத்' பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் .
சையாரா பட டீசர் வெளியானதிலிருந்து, அற்புதமான நடிப்புத் திறன்களை காட்டிய அறிமுகக் கலைஞர்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கியதற்காக யஷ் ராஜ் மற்றும் மோஹித் கூட்டணி ஒரு மனதாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.
பர்பாத் பாடலுக்காக ஆத்மார்த்தமான காதல் பாடலை பாடி அதிக வரவேற்பு பெற்ற இந்த தலைமுறையை சார்ந்த ஜூபின் நௌடியலை பாட வைத்துள்ளார் மோஹித்.
இது குறித்து மோஹித் கூறுகையில், “காதலுக்காக இந்த தலைமுறையின் குரலாக உள்ள பாடகர்கள் ப...








