Sunday, November 29

Author: admin

நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

News
பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ...
‘கழிப்பறை’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

‘கழிப்பறை’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

News
"கழிப்பறை" திரைப்பட இசை வெளியீட்டு விழா! Vanshika Makkar Films சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கழிப்பறை". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன், முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ப்ரீத்தி அமித் குமார் பேசியதாவது... எங்கள் திரைப்படத்திற்கு வருகை தந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம், அனைவரும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி. இசையமைப்பாளர் தீனா பேசியதாவது... தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை தர முன்வந்திருக்கும், அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்க...
ஜென்டில்வுமன் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ஜென்டில்வுமன் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர் பேசியதாவது... ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும...
‘சுழல்’-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியீடு!

‘சுழல்’-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியீடு!

News
பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியீடு!   முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர் சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உ...
ஓர் அசாதாரண தந்தையைப் பற்றிய படம் ‘ராமம் ராகவம்’!

ஓர் அசாதாரண தந்தையைப் பற்றிய படம் ‘ராமம் ராகவம்’!

News
"'ராமம் ராகவம்' அப்பா மகன் கதை மாதிரி தெரியும் ஆனால் படத்துக்குள் வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விசயம்". - சமுத்திரக்கனி! ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்கு...

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் மேகா ஷெட்டி!

Uncategorized
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி! தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான 'ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருக...
அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’!

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் கோகுல் - ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'அஃகேனம்' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அஃகேனம் என்றால் ஆயுத எழுத்தை குறிக்கும் என்பதால் டைட்டிலுக்கான ஃபர்ஸ்ட் லுக் அர்த்தப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருப்பது... ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் கோகுல் - நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவின...
கருணாஸ் – கருணாகரன் நடிக்கும் ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் “!

கருணாஸ் – கருணாகரன் நடிக்கும் ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் “!

News
 சுந்தரா டிராவல்ஸ் படத்தின் பார்ட் - 2 " சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் " முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான " சுந்தரா டிராவல்ஸ்" படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு " சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் " என்று தலைப்பிட்டுள்ளனர். கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்...
ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிக்கும் ‘லில்லி புட்’!

ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிக்கும் ‘லில்லி புட்’!

News
சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பாளர். விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர் சேலம் வேங்கை அய்யனார்.  மாஸ்டர் மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் 'கரா' படத்தில் தாதா வேடத்தில் இவர் நடித்துள்ளார். அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்'தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் 'வெட்டு' என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் காட்டுவாசி சமூகத்தின் தலைவராக நடித்துள்ளார். விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் 'நொடிக்கு நொடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சேலம் வேங்கை அய்யனார் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. தனது ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிப்பில் 'என்டர் தி டிராகன்' என்ற படத்தை தமிழில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். ...
விருது பெற்ற ‘சுழல்’ தொடரின் இரண்டாவது சீசன்!

விருது பெற்ற ‘சுழல்’ தொடரின் இரண்டாவது சீசன்!

News
பிரைம் வீடியோவின் ' சுழல் - தி வோர்டெக்ஸ் ' முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்! பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ' சுழல் - தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சுழல்- தி வோர்டெக்ஸ...