Sunday, November 29

Author: admin

பிப்ரவரி 21 அன்று திரைக்கு வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’

பிப்ரவரி 21 அன்று திரைக்கு வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’

News
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படக்குழு படவெளியீட்டை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்தது! மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ்த் திரைப்படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21,2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் குழுவான, அதன் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்டோர், நேற்று மாலை அச்சு மற்றும் சமூக ஊடகத்தினருடன் உரையாடி தங்கள் அனுபவங்களையும், இத்திரைப்படத்தைப் பற்றிய உற்சாகமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாக, திறமைமிக்க அனிகா சுரேந்திரனும் இணைந்து நடிக்கிறார். இதில் ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், இவர்களுடன் பிரபலமான மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சித்தார்த்தா ஆகியோருடன் மூத்த நடி...
SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகும் “35 சின்ன விஷயம் இல்

SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகும் “35 சின்ன விஷயம் இல்

News
நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது! நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல என்பது ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது! ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறாள். இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களும், அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதும், வெகு சுவாரஸ்யமான திரைக்கதையால் சொல்லப்பட்டுள்ளது. எளிய நடுத்தர வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் திரையில் பார்க்கும்படி ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகள் மற்றும் விமர்ச...
‘விடாமுயற்சி’ பட அனுபவம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி

‘விடாமுயற்சி’ பட அனுபவம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி

News
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதுபற்றிய வலுவான மெசேஜ் 'விடாமுயற்சி' படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்" - இயக்குநர் மகிழ் திருமேனி!* நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் இயக்குநர் மகிழ் திருமேனியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் உள்ள பல விஷயங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பெண் மீது ஆண் ஒருவன் காட்டும் அன்பும் அக்கறையும். படத்திற்கான வரவேற்பு குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்து கொண்டதாவது, "அஜித் குமார் சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி. எங்களின் ஆரம்ப சந்திப்புகளின் போது, பெண்களை மதிக்கும் ஒரு திரைப்படத்தில...
அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’!

அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’!

News
நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ *படப்பிடிப்பு தொய்வின்றி நடைபெறும் நிலையில் மார்ச்சில் நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை வெளியிட குழுவினர் தீவிரம்* ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய ...
மதன் கார்க்கி எழுதிய ‘நாடோடி பாடல்’

மதன் கார்க்கி எழுதிய ‘நாடோடி பாடல்’

News
வேறுபட்ட வாழ்வின் மூலம் வேறுபட்ட புரிதலை விளக்கும் 'நாடோடி': உலக விதிமுறைகளுக்கு அப்பால் நகர்ந்து, குறைந்தபட்ச தேவைகளிலும் சுதந்திரத்தைக் கண்டறிய முடியும் என்பதை ஒரு நாடோடியின் பார்வையில் முன் வைக்கிறது 'நாடோடி பாடல்'. சாம் லாரன்ஸ் இசையமைத்திருக்கும் இப்பாடல் வாழ்க்கையின் தேவைகளைப் பற்றிய வேறுபட்ட புரிதலை நமக்கு வழங்குகிறது. மதன் கார்க்கியின் வரிகள் ஆழமான சுயபரிசோதனையை ஒரு நாடோடியின் கருத்துக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது. நாட்டுப்புற மெட்டில் அமைந்துள்ள இப்பாடலைப் பாடகர் விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். அலைந்து திரியும் நாடோடியின் வாழ்வு எப்படி நம்முள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறது என்பதை அறிய இப்பாடலை பாமியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம். பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/NadDI2Lt9G8 ‘Naadodi’ Explores the Life of a Wanderer: The newly released song Naadodi presents the per...
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்!

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்!

News
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம்! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பறந்து போ' திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. 'பறந்து போ' திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது. இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்ட...

விடாமுயற்சி – விமர்சனம்

Reviews
விடாமுயற்சி - விமர்சனம் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசண்டாரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் படம் விடா முயற்சி. அஜர் பைஜான் நாட்டு தலைநகர் வாக்குவில் தன் மனைவி த்ரிஷாவுடன் வாழ்ந்து வருகிறார் அர்ஜுன். திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சில மனஸ்தாபங்கள் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார் த்ரிஷா. விவாகரத்து கிடைக்கும்வரை தன் பிறந்த வீட்டில் இருக்க நினைக்கும் நிஷாவை அஜித்தே காரில் அழைத்துச் சென்று விடப் போகிறார். அதிக போக்குவரத்தோ ஆள் நடமாட்டமோ இல்லாத நெடிய பாதையில் அஜித் திரிஷா செல்லும் கார் பழுதாகி நின்றுவிட, அப்போது கன்டெய்னர் லாரியில் அங்கு வரும் அர்ஜுனும் அவரது மனைவி ரெஜினாக கசண்ட்ராவும் உதவ முன் வருகிறார்கள். சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ரெஸ்டாரண்டில் த்ரிஷாவை விட்டு விடுவதாகவும், அதற்குள் அஜித் காரை ரிப்பேர் செய்து எடுத்து அங்க...
ஓர் இரவில் நடக்கும் க்ரைம் திரில்லர் ‘அவன் இவள்’!

ஓர் இரவில் நடக்கும் க்ரைம் திரில்லர் ‘அவன் இவள்’!

News
ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் கிரேடிங் அபிஷேக் கையாண்டுள்ளார். கலை இயக்கம் அர்ஜுன். இசை வடிவமைப்பு, சவுண்ட் மிக்ஸிங் கிலென் ரால்ஃப். மர்யம் தியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. ஒரு இரவில் நடக்கும் க்ரைம் திரில்லராக இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன் ‘கள்வா’, ‘எனக்கொரு wife வேணுமடா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய ஜியாவின் 3வது குறும்படம் இது. இது குறித்து ஜியா கூறும்போது, ‘‘முதல் இரு குறும்படங்களிலும் வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதில் வசனம் குறைவாகவும் விஷுவல் கதை சொல்லல் அதிகமாகவும் இருக்கும். எனது முதல் இரண்டு குறும்படங்களைப் போல், இதுவும் முழுக்க கமர்ஷியல் அம்ச...
யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’!

யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’!

News
யுனிவர்சல் பிக்சர்ஸ் 'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய ரகசியங்கள் மற்றும் சிறந்த சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது! மும்பை, பிப்ரவரி 6, 2025: வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள ஜூராசிக் பார்க் பட ரசிகர்கள் மீண்டும் தங்களுக்கு விருப்பமான உலகத்தில் நுழைய இருப்பது குறித்து உற்சாகமாக உள்ளனர். பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய பிரபஞ்சத்திற்...
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் ஆகும் ஆஃபீஸ் சீரிஸ் !

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் ஆகும் ஆஃபீஸ் சீரிஸ் !

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு வருவதில் இந்த...