Sunday, November 29

Author: admin

ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்”!

News
லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்” (Delivery Boy) அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது....
‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

News
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், "ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன். என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடில. அன்னிக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா, என் ஃபர்ஸ்ட் தமிழ்ப்படத்தைப் பத்திப் பேசாம ஜெய்பீம் பத்தி என்னால கண்டிப்பா பேச முட...
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்!

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்!

News
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்கும் விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம்!* நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்தார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார். இவரது தயாரிப்பில், இந்த வருடம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ உட்பட சில படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. தற்போது, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை அறிவிப்பதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் மகிழ்ச்சியடைகிறார். இந்தப் படத்தில் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமாரும் அறிமுகமாகிறார். திறமை மற்றும் கடின உழைப்பு இருப்பவர்களை நிச்சயம் கோலிவுட் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கும்....
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்

கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்

News
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் இன் முதல் காட்சிக்கு முன்னதாக, சென்னை காமிக் கானில் கேப்டன் அமெரிக்கா மற்றும் ரெட் ஹல்க் நடிப்பதைக் காண ரசிகர்கள் வரிசையில் நிற்கிறார்கள் வரவிருக்கும் கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் MCU ரசிகர்களுக்கு, சென்னை காமிக் கான் ஒரு அற்புதமான பாப்-கலாச்சார நிகழ்வாக நிரூபிக்கப்பட்டது. அற்புதமான மற்றும் படத்திற்கு ஏற்ற அனுபவ அரங்கத்துடன், ரசிகர்கள் கேப்டன் அமெரிக்கா மற்றும் ரெட் ஹல்க் மீதான தங்கள் அன்பில் ஈடுபடவும், போஸ் கொடுக்கவும், ஈடுபடவும், வேடிக்கையாகவும் நேரத்தை செலவிடவும் முடிந்தது. சிறப்பு அரங்கில் ரெட் ஹல்க் கோப மீட்டர் இருந்தது, அங்கு ரசிகர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்த சுத்தியலை உடைக்க முடியும். மற்ற அற்புதமான காட்சிகளில் கேப்டன் அமெரிக்கா கேடயத்தின் பெரிய கட்அவுட்கள் மற்றும் புத்தம் பு...
நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’!

நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’!

News
நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை இயக்குநர் ராம் கோபால் வர்மா இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டார்! பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ சீரிஸை எடுத்துள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டார். நிகழ்வில் ராம் கோபால் வர்மா பேசியதாவது, "நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை வெளியிடும் நிகழ்வில் நான் சிறப்பு விருந்தினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற புகைப்படங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பு. இந்த ஃபேஷன் ஃபோட்டோ சீரிஸ் ஆராத்யாவை இயற்கையுடன் இணைக்கும் வகையில் மக்காவ் பறவை, இகுவானா, அரிய மஞ்சள் நிற பைதான், கருப்பு நிற ஸ்வான்ஸ், பெரிய பந்தய குதிரை மற்றும் ஆஸ்ட்ரிச் ஆகிய உரியினங்களை...
பி.டி.ஜி அறக்கட்டளையின் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி!

பி.டி.ஜி அறக்கட்டளையின் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி!

News
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் 'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக...
அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘#AS23’

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘#AS23’

News
ஹாப்பி ஹை பிக்சர்ஸின் ( Happy High Pictures) இரண்டாவது படமான '#AS23' - பூஜையுடன் தொடக்கம்! தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் '#AS23 ' எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை 'போர் தொழில்' எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீள பொழுதுபோக்கு ...
பிரம்மாண்டமாக உருவாகும் அகாண்டா 2: தாண்டவம்

பிரம்மாண்டமாக உருவாகும் அகாண்டா 2: தாண்டவம்

News
நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்‌ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை,...
தண்டேல் – விமர்சனம்

தண்டேல் – விமர்சனம்

Reviews
தண்டேல் – விமர்சனம் மீன் பிடித்தலை தொழிலாகக் கொண்ட மக்கள் தங்கள் தலைவனை தண்டில் என்று அழைப்பது வழக்கம். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் தலைவன் தண்டேல் நாக சைதன்யா தலைமையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஒன்பது மாதங்கள் அங்கு தங்கி மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து மூன்று மாதங்கள் தங்கள் சொந்த ஊரில் ஓய்வெடுப்பது அவர்களது வாடிக்கை. சிறு வயது முதல் ஒன்றாக வளரும் நாக சைதன்யாவும் சாய்பல்லவியும் உயிருக்கு உயிராக வெறித்தனமாக காதலிக்கின்றனர். மீன் பிடித்தல் ஆபத்தான தொழில் என்பதால் நாக சைதன்யா அதில் ஈடுபட வேண்டாம் என சாய்பல்லவி அவருக்கு அன்புடன் கட்டளையிடுகிறார். ஆனால் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொள்வதாக சொல்லும் நாக சைதன்யா மீண்டும் மீன் பிடிக்க சென்று விடுகிறார். இதன் காரணமாக சாய் பல்லவி அவருடன் கோபித்துக் கொண்டு தொலைபேசியில...
“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
இயக்குநர் சுசீந்திரனின் "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் திரு பேசியதாவது.... தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கும், இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் இருவருமே எனது குடும்பம் போல் தான். அவர்களைப் போலவே நானும் இப்படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். தனஞ்செயன் சார் இருக்கும் அபார்ட்மெண்டில் தா...