Sunday, November 29

Author: admin

பணி திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

பணி திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

News
பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ! Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசியதாவது… தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்போது பணி மூலம் மீண்டும் வருவது மகிழ்ச்சி. ஜ...

ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

News
'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, "நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்". எடிட்டர் நிரஞ்சன், "இந்த பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் எண்டர்டெயினிங்காக இருக்கும்". டான்ஸ் மாஸ்டர் பூபதி, "என்னைப் போன்ற பலருக்கும் மாஸ்டர் ஒரு இன்ஸ்பிரேஷன். அவருடன் பணிபுரிந்தது மக...
‘முஃபாசா’ தி லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுத்த அர்ஜுன் தாஸ்!

‘முஃபாசா’ தி லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுத்த அர்ஜுன் தாஸ்!

News
டிஸ்னியின் ‘முஃபாசா’ தி லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் வெர்சனில் அர்ஜுன் தாஸ் முஃபாஸாவாக கர்ஜிக்கிறார்! மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படத்திற்காக தமிழ் சினிமாத் துறையின் முன்னணி நாயகர்களான அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, வி.டி.வி கணேஷ் மற்றும்M. நாசர் ஆகியோருடன் இணைந்து அர்ஜுன் தாஸும் குரல் கொடுத்திருக்கிறார்! ~ இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள முஃபாசா: தி லயன் கிங் இந்தியாவில் 2024 டிசம்பர் 20ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது ~ Chennai, 20th November 2024: காடுகளின் இறுதி ராஜாவான முஃபாசா: தி லயன் கிங், இப்போது தமிழ்த் திரைப்படத் துறையின் மிகவும் பிரபலமான சில குரல்களுடன் தமிழ் மொழியிலும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆராய்வதற்கான நேரம் இது! 2019ஆம் ஆண்டின் லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' பிளா...
தேனிசை தென்றல் தேவா வெளியிடும் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” பாடல்!

தேனிசை தென்றல் தேவா வெளியிடும் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” பாடல்!

News
தேனிசை தென்றல் தேவா வெளியிடும் " சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் " பாடல்! கானா அரசரின் 50 வருட திரைத்துரை மற்றும் தன் பிறந்த நாளான இன்று " சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் " எனும் பாடலை வெளியிட்டுள்ளார். சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் " காத்து வாக்குல ஒரு காதல் ". கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் " சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் " எனும் பாடலை சிறப்பாக பாடியும், தன் பிறந்த நாளான இன்று தேனிசை தென்றல் தேவா வெளியிடுள்ளார் இப்பாடலில் இயக்குநரும் நடிகருமான மாஸ் ரவி, சஞ...
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான கிரைம் திரில்லர் ‘லாரா’!

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான கிரைம் திரில்லர் ‘லாரா’!

News
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன். 'லாரா' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது, "எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்...
சீனாவில் வெளியாகும் ‘மகாராஜா’ திரைப்படம்!

சீனாவில் வெளியாகும் ‘மகாராஜா’ திரைப்படம்!

News
Yi Shi Films மற்றும் Alibaba Pictures இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் படமான “மகாராஜா” படத்தினை, நவம்பர் 29, 2024 அன்று, சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது ! Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை, சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை, பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மஹாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சியமைப்பு, என அனைத்து தரப்பிலும் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ், இந்திய கலாச்சார பன்முகத்தன்மையை...
மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !

மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !

News
மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் ! இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்!! மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி,  மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் **மகேஷ் நாராயணன்** இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட மற்றும் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். இது மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை, சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இண...
’பராரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

’பராரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

News
’பராரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”. தயாரிப்பாளர், நடிகர் ஹரி, "'பராரி' படம் எங்களுடைய சின்ன முயற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்". நடிகை சங்கீதா, “இதுதான் என்னுடைய முதல் படம். எங்கள் அனைவருடைய உழைப்பும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இவர்கள் எல்லாரிடம் இருந்தும் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கும் நன்றி”. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் முடித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமுருகனின் உதவியாளர் எழில் என்னிடம் வந்து இந்த கதையை படிக்க சொல்லி கொடுத்தார். கதை...

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் !

News
'உதவும் கரங்கள்' குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் ! கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2024 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார். அதன்பின் நடிகர் அருண் விஜய் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம் , என்னுடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்கள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோடு நானும் இணைந்து செய்வதில் மிகவும் சந்தோஷம், இதை பார்த்து மற்ற அனைவரும் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும் அதற்கான விழிப்புணர்வு தான் இது. இந்த முகாமை சிறப்பாக நடத்திய என் ரசிகர்களுக்கு நன்றி. ந...
நவம்பர் 29 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ‘பாராசூட்’ சீரிஸ்!

நவம்பர் 29 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ‘பாராசூட்’ சீரிஸ்!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டிரெய்லரை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ், இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான பாராசூட் சீரிஸ், இரண்டு இளம் சிறார்களின் உலகை பற்றியதாக உருவாகியுள்ளது. குழந்தைகளின் மீது பெரும் அன்பை வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டுமென அவர்கள் மீது கண்டிப்பு காட்டுகிறார்கள். இரு சிறுவர்களும் பெற்றோருக்கு தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'பாராசூட்'. இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங...