Sunday, November 29

Author: Raja Senthilnathan

‘பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

‘பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

News
'பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து வெற்றி படமாக்கிய படக்க...
ஜூலை 18ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சையாரா’!

ஜூலை 18ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சையாரா’!

News
  "புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுபிடிக்கவில்லை ": மோஹித் சூரி! சையாரா திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ள படம் . யஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று சையாராவின் டிரெய்லரை வெளியிட்டனர். தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோஹித் சூரி கூறுகையில், "ஒரு கட்டத்தில், நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், புதுமுகங்களுடன் சையாராவை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். ஆனால், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டாவின் திறமையான நடிப்பால் எனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது " என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மோஹித். மேலும், இது குறித்து மோஹித் கூறுகையில், "அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா போன்ற திறமையான நடிகர்களைக் கண்ட...
பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’!

பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’!

News
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் *நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, :* இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு வாய்ப்பு ...
ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’!

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’!

News
ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’ விறுவிறு படப்பிடிப்பில்.. இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்.கண்ணன் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் தனது திரைப்பயனத்தை துவங்கி, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல கமர்சியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள #காந்தாரி படத்தை தயாரித்து இயக்கிய படத்தை இம்மாதம் (ஜீலை) வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தை மசாலா பிக்ஸ் (MASALA PIX) நிறுவனம் தயாரிக்கிறது. ‘இவன் தந்திரன்’ படத்தில் சக்தி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பராக ஆர்.ஜே பாலாஜியும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத...
புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!

News
45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும...
விஜய் சேதுபதி, சம்யுக்தா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் சேதுபதி, சம்யுக்தா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், இணையும், பான் இந்தியா திரைப்படத்த்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது ! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதன் முறையாக இணையும் பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது. இந்த மிக பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். சார்மி கௌர் இப்படத்தை வழங்குகிறார். தெலுங்கு திரையுலகின் லக்கி சார்ம் எனக் கொண்டாடப்படும் சம்யுக்தா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகர்கள் தபு மற்றும் விஜய் குமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான செட் ஒன...
நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்!

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்!

News
நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம் ! 'அங்கீகாரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான *கே ஜே ஆர்*- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் ' புரொடக்சன் நம்பர் 15' எனும் பெயரில் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. 'விலங்கு' வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் கோ- டைரக்டராக பணியாற்றிய *ரீகன் ஸ்டானிஸ்லாஸ்* இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், ஸ்ரீ தேவி, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி , அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் , அஜூ வர்கீஸ் , ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் பி. வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த தி...
அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வரும் ‘காந்தாரா: சேப்டர்1  !

அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வரும் ‘காந்தாரா: சேப்டர்1 !

News
ரிஷப் ஷெட்டி பிறந்த நாளையொட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது – இப்படம் வரும் அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வருகிறது! 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. 2022 ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்களைத் தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் (கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மெகா ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம்) அடுத்ததாக தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1 – தற்போது இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் ப்ரீக்வலில், ரிஷப் ஷெட்டி இதுவரை பார்த்திராத ஒரு அதிரடி தோற்றத்தில் வெளிவந்திருக்கும் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, படக்குழுவினர் ஒரு புத...
ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!

ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!

News
’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்! ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகை மிதிலா பால்கர், "'ஓஹோ எந்தன் பேபி' ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்". நடிகை அஞ்சு குரியன், "'ஓஹோ எந்தன் பேபி' ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழ...
பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சாய் அபயங்கர் !

பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சாய் அபயங்கர் !

News
மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!! “பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் ! ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மா...