Monday, April 13

Yamaha Music India announced the appointment of A.R. Rahman as Brand Ambassador!

Loading

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பிராண்ட் தூதராக அறிவித்த யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம்

யமஹாவின் முயற்சி மேட் இன் இந்தியாவிற்கு பங்களிப்பதாக ரஹ்மான் கருத்து

சென்னை, இந்தியா | 22 மார்ச் 2026: அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளரும், உலகளவில் மதிப்புமிக்க இசை மேதையுமான ஏ.ஆர். ரஹ்மான், இந்திய இசையை சர்வதேச அரங்கில் உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்திய திறமையின் உலகளாவிய திறனை பிரதிபலிக்கும் அவரது பயணம், இந்தியாவில் இசை பண்பாட்டை வளர்க்கும் யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் நோக்கத்துடன் இணங்கி செல்வதாக இந்நிறுவனம் கருதுகிறது. இந்த கூட்டாண்மை, இந்தியாவின் இசை சூழலை வலுப்படுத்துவதற்கான யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இது குறித்து, யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. யமமோட்டோ டகெதோஷி கூறுகையில், “இசை என்பது யமஹா நிறுவனத்தின் தத்துவத்தின் மையமாக உள்ளது. இந்தியாவின் வளமான இசை பாரம்பரியம் உலகளவில் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம். எங்கள் ‘மேட் இந்த இந்தியா’ முயற்சி மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்துள்ள இந்த கூட்டாண்மையின் மூலம், அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களை ஊக்குவித்து, இந்திய முழுவதும் கட்டமைக்கப்பட்ட இசைக் கல்வியை விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம்.” என்று தெரிவித்தார்.

யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் திரு. ரியோஜி மருயாமா கூறுகையில், “இசைக்கருவிகள் விற்பனையை தாண்டி எங்கள் நோக்கம், பயிற்சி முகாம்கள், பள்ளிகளுடன் இணைப்பு, மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் இசைக் சமூகங்களை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது. இந்த கூட்டாண்மை, இசையை ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் எங்கள் பார்வையை வலுப்படுத்துகிறது.” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் பேசுகையில், “யமஹா நிறுவனம் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இசைத் திறமையின் மேன்மையை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத்துடன், ‘மேட் இன் இந்தியா’ முயற்சியின் மூலம் தரமான இசைக்கருவிகளை எளிதாகக் கிடைக்கச் செய்கின்ற இந்த நிறுவனத்துடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். இந்த முயற்சி, எனது கேஎம் இசைப் பயிலகம் மற்றும் தி சன்ஷைன் ஆர்கெஸ்டராவில் பயிலும் இளம் திறமைகளுக்கு ஏற்கனவே பயன் அளித்து வருகிறது. இளம் கலைஞர்களை வழிநடத்தி, இசைக் கல்வியை வலுப்படுத்தினால், இந்திய இசைக்கலைஞர்கள் உலக அரங்கில் முன்னணி வகிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

யமஹா மியூசிக் இந்தியா பற்றி:

மார்ச் 2008 இல் நிறுவப்பட்ட யமஹா மியூசிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், யமஹா கார்போரேஷன் உலகளாவிய குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது இந்திய சந்தைக்கு யமஹா இசைக்கருவிகள் மற்றும் ஆடியோ தயாரிப்புகளை முழுமையாக வழங்குகிறது. நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் அமைந்துள்ளது.

நிறுவனத்தின் முக்கிய கொள்கைகள் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை மற்றும் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் சிறப்புத் தரம், உள்ள சந்தையை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய சந்தைகளை உருவாக்குதல், நீண்டகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விற்பனைக்குப் பிந்தைய சேவைகளில் சிறந்த ஆதரவு, உலகளாவிய விரிவாக்கம் மற்றும் பல்துறை வளர்ச்சி ஆகியவற்றில் அமைகின்றன.

இந்தியாவில் நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, யமஹா மியூசிக் இந்தியா ‘மேட் இந்த இந்தியா’ தயாரிப்புகளை வலுப்படுத்தி வருகிறது. குறிப்பாக இசைக்கருவிகள் மற்றும் ஆடியோ தயாரிப்புகளில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
2019 முதல் சென்னை நகரில் உற்பத்தி நிலையம் அமைத்து, உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் செலவுக் குறைப்பு, விநியோக வேகம் மற்றும் சந்தை தேவைகளுக்கு விரைவான பதில் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை உற்பத்தி மையத்தில் தொடர்ச்சியான புதுமைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், சில்லறை விற்பனை, நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இசைக் கல்வி முயற்சிகள் மூலம் நிறுவனம் தனது வளர்ச்சியை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
யமஹா நிறுவனத்தின் “இசை மற்றும் ஒலியின் மூலம் வாழ்க்கையை வளப்படுத்துதல்” என்ற தத்துவம், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பண்பாட்டை உருவாக்கி, இசையை வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணமாக மாற்றுகிறது.